twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது...பத்மஸ்ரீ யை விட இது தான் பெரிசு

    |

    திருவனந்தபுரம் : 80 மற்றும் 90 களில் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் நடிகர் ஜெயராம். இப்போது முக்கியமான ரோல்கள், வில்லன் கதாபாத்திரம், துணை நடிகர் ரோல்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லை கதையை பொறுத்து சில படங்களில் ஹீரோவாகவும் ஜெயராம் நடிக்கிறார்.

    Recommended Video

    Ponniyin Selvan படத்துல ஒரு Dress கூட கொடுக்கல, Jayaram Speech | PS1 Song lauch *Kollywood

    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயராம் மத்திய அரசின் பத்மஸ்ரீ, கேரள அரசின் 2 திரைப்பட விருதுகள், தமிழக அரசின் திரைப்பட விருதுகள், 4 தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.இவர் தற்போது மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி ரோலில் நடித்துள்ளார்.

    மகான் படம் குறித்து விக்ரம் வருத்தம்: மகன் துருவ் விக்ரமுடன் நடித்த முதல் படமே இப்படி ஆகணுமா?மகான் படம் குறித்து விக்ரம் வருத்தம்: மகன் துருவ் விக்ரமுடன் நடித்த முதல் படமே இப்படி ஆகணுமா?

    மலையாள திரையுலகின் டாப் ஹீரோக்களில் ஒருவரான இவர் 1980 களில் கலாபவன் இன்ஸ்ட்யூட்டில் மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையை துவக்கியவர். 1988 ல் அபரன் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். காமெடி, குடும்ப கதை கொண்ட படங்களிலேயே ஜெயராம் அதிகம் நடித்துள்ளார்.இவரது மகன் காளிதாஸூம் இப்போது தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார். சமீபத்தில் காளிதாஸ் நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்த 'பேப்பர் ராக்கெட்' வெப் சீரீஸ் பாராட்டுக்களை வாரி குவித்துள்ளது.

    ஜெயராமுக்குள் இப்படி ஒரு முகமா?

    ஜெயராமுக்குள் இப்படி ஒரு முகமா?

    நடிர் ஜெயராம் சினிமாவில் பிரபலமானவராக இருந்தாலும், எளிமையான ஒரு வாழ்க்கையையே வாழக் கூடியவர். கேரளாவின் பாரம்பரிய இசை வாத்தியமான செண்டை மேளம் வாசிக்க கற்றவர். இவருக்கு யானைகள் என்றால் கொள்ளை பிரியம்.ஒரு யானையையும் சொந்தமாக வைத்து, பராமரித்து வருகிறார்.

    இவ்வளவு திறமை இருக்கா?

    இவ்வளவு திறமை இருக்கா?

    ஜெயராம் ஒரு நல்ல எழுத்தாளர் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அவர் யானைகளை பற்றி ஒரு புத்தகமும் எழுதி உள்ளார். கமல்ஹாசன் தான் இவரது நெருங்கிய நண்பர். நடிகர், பாடகர், இசைக்கலைஞர், விலங்குகள் பிரியர் என்பதை தாண்டி இவர் ஒரு நல்ல விவசாயியும் கூட.

    ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது

    ஜெயராமுக்கு சிறந்த விவசாயி விருது

    நடிகர் ஜெயராம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாட்டு பண்ணையை நடத்தி வருகிறார்.இந்த பண்ணைக்கு ஆனந்த் பண்ணை என்று பெயரும் வைத்துள்ளார். சுமார் 8 ஏக்கர் நிலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பசுக்களை ஜெயராம் தனது பண்ணையில் வளர்த்து வருகிறார். இதுக் குறித்த பல செய்திகள், பேட்டிகள் இணையத்திலும் வைரலாகியுள்ளன. இந்நிலையில், ஜெயராமுக்கு சிறந்த விவசாயி எனும் விருதை வழங்கி கேரள முதல்வர் பினராயி விஜயன் கவுரவித்துள்ளார்.

    பத்மஸ்ரீயை விட இதுதான் மகிழ்ச்சி

    பத்மஸ்ரீயை விட இதுதான் மகிழ்ச்சி

    கேரள மாநில விவசாய துறை சார்பில் திருவனந்தபுரத்தில் சமீபத்தில் விவசாய தின விழா நடைபெற்றது. இதில் சிறந்த விவசாயி என்ற விருது நடிகர் ஜெயராமுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஜெயராம் செய்து வரும் விவசாய பணிகளுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன. இதில் பேசிய நடிகர் ஜெயராம் "பத்மஸ்ரீ விருதை விட விவசாயி விருது கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என கூறியுள்ளார்.

    குவியும் வாழ்த்துக்கள்

    குவியும் வாழ்த்துக்கள்

    மேலும் இந்த விழா தொடர்பான போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து முதல்வருக்கும் கேரள மாநில அரசுக்கும் நடிகர் ஜெயராம் தனது நன்றியை கூறியுள்ளார். இதனை ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிர்ந்து வருவதால் ஜெயராமுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

    English summary
    Actor Jayaram mentioned after receiving the farmer’s award from the Chief Minister that he feels completely happy and proud past receiving the Padma Shri.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X