twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் விருப்பம் - யுவன் ஷங்கர் ராஜா

    By Manjula
    |

    சென்னை: சகிப்பின்மை விவகாரத்தில் விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியிருக்கிறார்.

    சகிப்பின்மை மற்றும் அது தொடர்பான தொடர்பான விவகாரங்கள் நாளுக்குநாள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான போராட்டங்களும் நாட்டில் அதிகரித்துக் கொண்டுள்ளன.

    Awards Return People's Personal Choice - Yuvan Shankar Raja

    சமீபத்தில் நடிகர் அமீர்கான் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் இந்த விவகாரத்தில் தங்களை கருத்துக்களை வெளியிட அது பெரிய பிரச்சினையாக மாறி மிகப்பெரிய வாதங்களுக்கு வழிவகுத்தது.

    இந்நிலையில் சகிப்புத்தன்மை விவகாரத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது கருத்தினை வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

    "சகிப்பின்மை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை மேலும் அதுபோன்ற நிலைமை இதுவரை எனக்கு ஏற்பட்டதில்லை. நாட்டில் சகிப்பின்மை நிலவுவதாக கூறி எழுத்தாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட விருதுகளை திருப்பிக் கொடுப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

    அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை" என்று யுவன் தெரிவித்து இருக்கிறார்.

    வாய்ஸ் ஆப் யுவன் என்ற பெயரில் யுவன் நடத்தவிருக்கும் இசை நிகழ்ச்சியானது துபாய், மலேசியா உள்ளிட்ட நகரங்களில் நடைபெறவிருக்கிறது.

    இதில் இளையராஜா உட்பட பல்வேறு முன்னணி இயக்குனர்கள், பாடகர்கள் மற்றும் நடிகர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

    English summary
    Yuvan Shankar Raja Says in Recent Interview "I did not want to comment further about the intolerance, yet I have such a situation. Writers presented their awards, return to their personal preference".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X