ஹேப்பி நியூஸ்: விஜய் ரசிகர்களே, நீங்கள் பயந்தது நடக்கவில்லை #Mersal
சென்னை: தடையில்லா சான்று வழங்க விலங்குகள் நல வாரியம் மெர்சல் படத்தின் சில காட்சிகளில் கையை வைத்துவிடுமோ என்று விஜய் ரசிகர்கள் அஞ்சினார்கள்.
விஜய் நடித்துள்ள மெர்சல் படத்திற்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்காமல் இருந்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் விலங்குகள் நல வாரியம் இன்று தடையில்லா சான்று வழங்கியுள்ளது. சான்று வழங்க படத்தின் காட்சிகளில் கையை வைத்துவிடுமோ என்று ரசிகர்கள் அஞ்சினர்.
நல்ல வேளை விலங்குகள் நல வாரியம் எந்த காட்சிக்கும் எதிர்ப்பு தெரிவித்து அதை நீக்குமாறு கூறவில்லை. அதனால் படம் கத்தரி போடாமல் அப்படியே ரிலீஸாகிறது.
தளபதி ரசிகர்களுக்கு மெர்சல் தீபாவளி இன்றே துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications