கடைசியா தான் வந்தாரு விநாயக் மகாதேவ்.. கெத்துக் காட்டும் கில்லி.. தவெகவினரை ஹேப்பியாக்கிய ஆக்சிஸ்!
சென்னை: தமிழ்நாடு தேர்தல் வெறும் 5 ஆண்டுக்கு ஒருமுறை வரும் தேர்தல் இல்லை. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் என விஜய் பிரச்சாரம் செய்தார். மேலும், திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே என தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளை அடித்து நொறுக்கியது தான் அவரது வாக்கு சதவிகிதம் அதிகரிக்க காரணம் என்கின்றனர்.
எக்ஸிட் போல் கருத்துக் கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் இன்று மாலை முதல் வெளியிட்டு வந்த நிலையில், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் யாருமே எதிர்பார்க்காத வண்ணம் விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிகபட்சமாக விஜய்யின் தவெக கட்சி 98-120 இடங்களை பிடிக்கும் என அறிவித்துள்ளது. திமுக அதற்கு அடுத்த இடத்தில் 92-120 இடங்களை பிடிக்கும் என அறிவித்த நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
திமுகவுக்கு சாதகமாக: சாணக்யா, போல் டைரி, பிரஜா போல், மின்னம்பலம் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் திமுக தான் பெரும்பான்மையை வென்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
ஜேவிசி மற்றும் வோட் வைப் அதிமுக மற்றும் பாஜகவின் என்டிஏ கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என்றும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு கட்சிக்கும் ஃபேவராக கருத்துக் கணிப்புகளும் மும்முனை போட்டியாக வெளியாகி உள்ள நிலையில், நிஜமான வெற்றியை எந்தக் கட்சி பெறப்போகிறது என்பதை காண மே 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
தவெக ஆட்சி அமைக்குதா?: மற்ற நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளை விட ஆக்ஸிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் அதிமுகவை மொத்தமாக வாரி சுருட்டி திமுகவுக்கு சரி சமமான போட்டியாக விஜய்யின் தவெக விஸ்வரூபம் எடுத்திருப்பது ரசிகர்களை ஹேப்பி ஆக்கியுள்ளது. இந்த சந்தோஷம் மே 4ம் தேதிக்கு பிறகு நீடிக்குமா? அல்லது மொத்தமாக முடியுமா? என்பதை வெயிட் பண்ணி பார்க்கலாம்.
கில்லி விஜய்: விஜய் கிங்கா அல்லது கிங் மேக்கராக மாறப்போகிறாரா என பல அரசியல் விமர்சகர்களும் ஆலோசித்து வரும் இடத்துக்கு தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய எழுச்சியை பெற்றிருப்பது கண்டிப்பாக பாராட்டத்தக்க ஒன்று தான். இனிமேல், விஜய் சினிமா பக்கம் செல்ல மாட்டார் என்றும் அவர் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் நடைபெறாது என்பதும் உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications