இமான் பற்றிய சர்ச்சைகளுக்கு பதிலடி கொடுக்க தயாரான சிவகார்த்திகேயன்.. அயலான் ஆடியோ லான்ச் இன்று!
சென்னை: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் திரைப்படம் பின்வாங்கும் பேச்சுக்கு இடமில்லை என்றும் வரும் பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் தைரியமாக மோதப் போவது உறுதியாகி உள்ளது.
அயலான் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், அந்த படத்தின் ஆடியோ லான்ச் இன்று மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இதில், இமான் குறித்த சர்ச்சைகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது பேச்சில் பதிலடி கொடுக்கப்போவதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த ஆண்டு இசையமைப்பாளர் இமான் கொடுத்த பேட்டி நடிகர் சிவகார்த்திகேயன் பெயரை டோட்டலாக டேமேஜ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அயலான் சிவகார்த்திகேயன்: இன்று நேற்று நாளை படத்தை விஷ்ணு விஷால், கருணாகரனை வைத்து இயக்கிய ரவிக்குமார் குறைந்த பட்ஜெட்டில் இப்படியொரு தரமான ஃபீல் குட் டைம் மெஷின் படத்தை இயக்க முடியுமா என பலரையும் வியக்க வைத்திருந்தார். அடுத்து அதிரடியாக சிவகார்த்திகேயனை வைத்து ஏலியன் படத்தை ஆரம்பித்ததும் வேற லெவல் சகோ என ரசிகர்கள் பாராட்டி வந்தனர். ஆனால், கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தாமதமாக அயலான் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷை பார்த்து பயமில்லை: தனிஷின் கேப்டன் மில்லர் படத்துடன் எதுக்கு போட்டி என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம், சுந்தர். சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் பின் வாங்கிய நிலையில், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்பதில் எந்தவொரு மாற்றமும் இல்லை எனக் கூறுகின்றனர்.
ஆடியோ லான்ச்: ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படம் இந்த வாரம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் ரேஸில் இருந்து அந்த படம் பின் வாங்கி விட்டதால் ஆடியோ லான்ச் இப்போதைக்கு இல்லை என தெரிகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா ஜனவரி 2ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக அயலான் ஆடியோ லான்ச்சை இன்று நடத்த சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளார். இன்று மாலை ஹோட்டல் தாஜ் கோரமண்டலில் நடைபெற உள்ளது.
குழந்தைகள் உற்சாகம்: அயலான் ஏலியன் ஜானர் படம் என்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் செம உற்சாகத்தில் உள்ளனர். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் ஏலியனுக்கு எப்படி குரல் கொடுத்திருக்கிறார் என்பதை ரசிப்பதற்கும் ரசிகர்கள் ரெடியாகி உள்ளனர். அயலான் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நிகழ்ச்சி என வைக்கப்பட்டு இருக்கும் பேனர் அருகே குழந்தைகள் சிலர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.
இமான் சர்ச்சைக்கு பதிலடி: இசையமைப்பாளர் இமான் இந்த ஆண்டு அளித்த பேட்டி பெரும் பிரளயத்தை உண்டாக்கியது. நடிகர் சிவகார்த்திகேயனை நம்ம வீட்டுப் பிள்ளையாக கொண்டாடி வந்த ரசிகர்கள் மத்தியில் அவன் ஒரு துரோகி என இமான் பகீர் கிளப்ப அவரது விவாகரத்துக்கே சிவகார்த்திகேயன் தான் காரணம் என பல குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டன. இதுவரை அது தொடர்பாக அமைதி காத்து வந்த சிவகார்த்திகேயன் இன்று அயலான் இசை வெளியீட்டு விழாவில் மெளனம் கலைப்பார் என்றும் பதிலடி கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











