Ayalaan: அயலான் இசை வெளியீட்டு விழாவில் திடீர் மாற்றம்... படமாவது சொன்னபடி ரிலீஸாகுமா?

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் உருவாகியுள்ளது. இந்நிலையில் அயலான் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், திடீரென அயலான் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.

அயலான் இசை வெளியீட்டு விழாவில் மாற்றம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனிடையே கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த அயலான் அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது.

 Ayalaan: Ayalaan grand Audio Launch event planned to happen in Taj Coromandel

ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் முழுக்க முழுக்க சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இன்று நேற்று நாளை என தனது முதல் படத்திலேயே டைம் ட்ராவல் பின்னணியில் சயின்ஸ் பிக்‌ஷன் மேஜிக் செய்திருந்தவர் இயக்குநர் ரவிக்குமார். இதனால் அயலான் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. படத்தின் பெரும்பகுதி கிராபிக்ஸ் காட்சிகளால் உருவாகியுள்ளதாம். எனவே அயலான் செம்ம விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் ஃபைனான்ஸ் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அதோடு கொரோனா ஊரடங்கு காரணமாக ட்ராப் ஆகும் நிலையில் இருந்தது. ஆனால் அயலான் படத்தின் உரிமையை வாங்கிய கேஜேஆர் ஸ்டுடியோ, மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி தற்போது ரிலீஸ் தேதியையும் குறித்துவிட்டது. அதன்படி ஜனவரி 12ம் தேதி அயலான் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அயலான் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தடைகளை கடந்து அயலான் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் அயலான் படத்தின் செகண்ட் சிங்கிளையும் கடந்த 20ம் தேதி படக்குழு வெளியிட்டது. ஏஆர் ரஹ்மான் இசையில் 'அயலா அயலா’ என்ற டைட்டிலில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து அயலான் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமமாண்டமாக நடைபெறும் என சொல்லப்பட்டது. மேலும், அதில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறும் எனவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்துக்கு பதிலாக, தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் வரும் 26ம் தேதி அயலான் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X