Ayalaan: “லால் சலாம், கேப்டன் மில்லருக்கு செக் வைத்த அயலான்..” சிவகார்த்திகேயனின் மாஸ்டர் பிளான்
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் அயலான்.
ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது.

அயலானுடன் லால் சலாம், கேப்டன் மில்லர் திரைப்படங்களும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளன.
இதனால் லால் சலாம், கேப்டன் மில்லருக்கு செக் வைக்க அயலான் டீம் புதிய முடிவெடுத்துள்ளது.
சிவகார்த்திகேயனின் மாஸ்டர் பிளான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன், சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், தீபாவளி ரிலீஸில் இருந்து பொங்கல் ரேஸுக்கு மாறியது. ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான், 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார், அயலானை இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து அயலான் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடிக்க, ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். பட்ஜெட் பிரச்சினை, கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் கிடப்பில் கிடந்த அயலான், தற்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
அயலான் படம் தாமதமாக கிராபிக்ஸ் வேலைகள் தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக அயலானில் ஒவ்வொரு காட்சியையும் கிராபிக்ஸில் செதுக்கி வருகிறாராம் இயக்குநர் ரவிக்குமார். இந்நிலையில், அயலானுக்குப் போட்டியாக ரஜினியின் லால் சலாம், தனுஷின் கேப்டன் மில்லர் படங்களும் பொங்கலுக்கு வெளியாகின்றன. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

டிசம்பர் 15ம் தேதி வெளியாகவிருந்த கேப்டன் மில்லர், கடைசி நேரத்தில் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. ஒரே நேரத்தில் ரஜினி, சிவகார்த்திகேயன் இருவரையும் டார்க்கெட் செய்துள்ளார் தனுஷ். லால் சலாம் படத்தில் ரஜினி கேமியோ ரோலில் மட்டுமே நடித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் லால் சலாம் ரிலீஸ் தள்ளிப் போகாது, கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தின் ரிசல்ட்டுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், லால் சலாம், கேப்டன் மில்லர் படங்களுக்கு செக் வைக்கும் வகையில் அயலான் டீம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது. அதன்படி, அயலான் படத்தை அதிகமான நாடுகளில் அதிக திரைகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இதுவரை வெளியான சிவகார்த்திகேயனின் படங்களில் அயலான் தான் அதிக திரைகளில் வெளியாகவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், பொங்கல் போட்டியில் அயலான் - கேப்டன் மில்லர் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











