Ayalaan: அயலானால் கேப்டன் மில்லருக்கு விழுந்த பலத்த அடி... சொன்னதை செய்த சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பல தடைகளை கடந்து பொங்கலுக்கு வெளியானது. ஆரம்பத்தில் தடுமாறிய இந்தப் படம், இப்போது அசுர பாய்ச்சலில் வசூலை வாரி குவித்து வருகிறது. முக்கியமாக தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு அயலான் பெரும் சவாலாக அமைந்ததோடு, இப்போது இன்னும் ஒரு தரமான சம்பவமும் செய்துள்ளது.

அயலானுக்கு பெருகும் ஆதரவு: இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான தமிழ்ப் படங்களில் அயலான் தான் வின்னர் என்பது உறுதியாகியுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் படமாக வெளியாகியுள்ளது அயலான். சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளையும் சிக்கல்களையும் கடந்து அயலான் தற்போது வெளியாகியுள்ளது.

 Ayalaan: Ayalaan Shifted To the Main Screen In Many Multiplexes and added more shows

அதேநேரம் அயலானுக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியானது. டிசம்பர் 15ம் தேதி ரிலீஸாகவிருந்த கேப்டன் மில்லர், ஷாருக்கானின் டங்கி, பிரபாஸின் சலார் படங்களுக்காக பின் வாங்கியது. அதேபோல் பொங்கலுக்கு வெளியாகவிருந்த லால் சலாம் பிப்ரவரி ரிலீஸுக்கு சென்றுவிட்டது. இதனால் தனுஷின் கேப்டன் மில்லர் தான் பொங்கல் ரேஸில் பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கேற்றபடி முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சிறப்பான ஓபனிங் கிடைத்தது. ஆனால், கதை, திரைக்கதை, மேக்கிங் அனைத்தும் சொதப்பியதோடு, அளவுக்கதிகமான வன்முறை காட்சிகளால் கேப்டன் மில்லருக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. எனவே குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்ற ரசிகர்கள், சிவகார்த்திகேயனின் அயலான் படத்துக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் அயலான் 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்ததோடு, அயலான் வெளியாகியும் ஒரு வாரம் ஆகிவிட்டது. இதுவரை அயலான், கேப்டன் மில்லர் படங்களுக்கு சமமான அளவில் ஸ்க்ரீன்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால், ஏராளமான மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்களில் கேப்டன் மில்லருக்கு தான் மெயின் ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அதேபோல் மற்ற திரையரங்குகளிலும் கேப்டன் மில்லருக்கு தான் அதிக காட்சிகள் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது அயலான் படத்துக்கு மட்டுமே ஃபேமிலி ஆடியன்ஸிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. அதனால் மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளில் அயலான் படத்துக்கு அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தனியாக செயல்படும் திரையரங்குகளும் அயலான் படத்துக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றன. இதனால் கேப்டன் மில்லரை விட அயலான் தான் அதிகமான திரைகளை ஆக்கிரமித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸிலும் அயலான் வசூல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X