Ayalaan Box Office Day 1: குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி.. அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ரவிக்குமார் இயக்கிய அயலான் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளியாகியுள்ளது. முதல் நாளில் எதிர்பார்த்ததை விட அயலானுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. இதனையடுத்து அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பல தடைகளை கடந்து நேற்று வெற்றிகரமாக வெளியானது. கேஜேஆர் ஸ்டூடியோ தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான், சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 Ayalaan Box Office Day 1: Sivakarthikeyan Ayalaan collected 4 crore on the first day of Box Office

இயக்குநர் ரவிக்குமார் ஒட்டுமொத்தமாக சுமார் 6 ஆண்டுகள் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளார். ஆரம்பத்தில் பட்ஜெட் பிரச்சினை காரணமாக ட்ராப் ஆகும் சூழல் இருந்தாலும், அயலான் மீது நம்பிக்கை வைத்து படத்தை முடிக்க காத்திருந்தார். பின்னர் கிராபிக்ஸ் பணிகளுக்காகவும் பல மாதங்கள் காத்திருந்து அயலான் படத்தை முடித்தார். இதனையடுத்து அதிக எதிர்பார்ப்புகளுடன் வெளியான அயலான் படத்துக்கு சிறப்பான ஓபனிங் கிடைத்துள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லருக்குப் போட்டியாக வெளியான அயலான் ஃபேமிலி ஆடியன்ஸ் படமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அயலான் படத்தை திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், அயலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, அயலான் முதல் நாளில் 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியான சிவகார்த்திகேயன் படம் அயலான் தான். அதேபோல் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியானாலும் அயலானுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் முதல் நாள் பாக்ஸ் 4 முதல் 5 கோடி மட்டுமே கலெக்‌ஷன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் முதல் நாள் வசூல் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை இருக்கும் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் விடுமுறை இன்னும் ஒரு வாரத்துக்கும் மேல் இருப்பதால், இனி வரும் நாட்களில் அயலான், கேப்டன் மில்லர் படங்களின் வசூல் அதிகரிக்கலாம் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. ஆனால், தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கான முதல் நாள் ஓபனிங் என்று பார்த்தால், அயலான், கேப்டன் மில்லர் இரண்டுமே ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X