Ayalaan Box Office Day 3: நாளுக்கு நாள் எகிறும் அயலான் வசூல்... மூன்றாவது நாள் பாக்ஸ் ரிப்போர்ட்!

சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அயலான், பாக்ஸ் ஆபிஸிலும் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுள்ளது. அயலான் முதல் நாளில் 3.2 கோடி ரூபாயும், இரண்டாவது நாளில் 4.35 கோடியும் வசூல் செய்திருந்த நிலையில், தற்போது மூன்றாவது நாள் கலெக்‌ஷன் குறித்து தெரியவந்துள்ளது.

அயலான் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகியுள்ளது. கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம், கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால் பொங்கல் ரேஸில் களமிறங்கியது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 Ayalaan Box Office Day 3: Sivakarthikeyans Ayalaan collected 13 crores in three days of Box Office

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். இன்று நேற்று நாளை என்ற சயின்ஸ் பிக்‌ஷன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். அதேபோல், அயலான் படத்தையும் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் செம்ம மிரட்டலாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை பார்த்த ரசிகர்கள் இயக்குநர் ரவிக்குமாருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி முதல் நாளில் அயலான் திரைப்படம் 3.2 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்திருந்தது. அதேபோல், இரண்டாவது நாள் 4.35 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாளை விட இரண்டாவது நாளில் வசூல் அதிகரித்தது. இந்நிலையில், மூன்றாவது நாளில் அயலான் வசூல் மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நேற்றைய தினம் அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் 5.50 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் மூன்று நாட்களில் மொத்தம் 13 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது அயலான். முதல் நாளை விட அடுத்தடுத்த நாட்களில் அயலான் வசூல் கூடிக் கொண்டே இருப்பதன் மூலம் ரசிகர்களிடம் ஆதரவு அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இதனால் இனிவரும் நாட்களிலும் இந்தப் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X