Ayalaan Box Office Day 5: கேப்டன் மில்லரை ஓரங்கட்டிய அயலான்..? பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரிப்போர்ட்!
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் 12ம் தேதி வெளியானது. தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்குப் போட்டியாக களமிறங்கிய அயலான், பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக பார்க்கப்படும் அயலான் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயலான் ஐந்தாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்: சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கிய அயலான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பட்ஜெட் பிரச்சினை உட்பட பல தடைகளை கடந்து இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது அயலான்.

சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் படத்திற்கு, ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அயலான் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதால், கிராபிக்ஸில் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விட்டுள்ளார் இயக்குநர் ரவிக்குமார். அதுமட்டும் இல்லாமல் திரைக்கதையும் ரசிக்கும்படி உள்ளதாக ரசிகர்கள் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்குப் போட்டியாக வெளியான அயலான், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளில் கேப்டன் மில்லர் படத்தை விட ரொம்பவே பின் தங்கியிருந்தது அயலானின் வசூல். ஆனால், பாசிட்டிவான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் அயலான் வசூல் பாக்ஸ் ஆபிஸில் எகிறத் தொடங்கியது. அதன்படி முதல் நாளில் அயலான் திரைப்படம் 3.2 கோடியும், இரண்டாவது நாள் 4.35 கோடி ரூபாய் தான் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மொத்தமாக 4 நாட்களில் 16 கோடி ரூபாய் வரை மட்டுமே அயலான் வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் அயலான் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, 4 நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் அறிவித்திருந்தது. இதனால், ரியல் பொங்கல் வின்னர் அயலான் என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டானது.
இந்நிலையில், அயலான் 5வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் 5 நாட்களில் அயலான் மொத்த வசூல் 56 முதல் 58 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை விட அதிகம் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனுஷின் கேப்டன் மில்லர் 5 நாட்களில் 30 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











