Ayalaan Box Office Day 6: தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் அயலான்... ஆறாவது நாள் வசூல் ரிப்போர்ட்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு 12ம் தேதி வெளியானது. ஃபேமிலி ஆடியன்ஸிடம் வரவேற்பைப் பெற்றுள்ள அயலான், பாக்ஸ் ஆபிஸிலும் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. நான்கே நாட்களில் 50 கோடி வசூலை கடந்த அயலான், இப்போது அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளது.

அயலான் ஆறாவது நாள் பாக்ஸ் ஆபிஸ்
மாவீரனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படம் அயலான். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பல தடைகளை கடந்து தற்போது வெளியாகியுள்ளது. இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் பிரபலமான ரவிக்குமார் அயலானையும் இயக்கியுள்ளார். இதுவும் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் அனைவரும் பார்க்கும் படமாக உருவாகியுள்ளது.

 Ayalaan Box Office Day 6: Sivakarthikeyans Ayalaan collected 60 crores in Six days of Box Office

இதனால் முதல் நாளில் இருந்தே அயலான் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க, கருணாகரன், யோகி பாபு ஆகியோர் காமெடியில் கலக்கி இருந்தனர். அயலான் தான் சிவகார்த்திகேயனின் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானர் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கமாகவே அவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம்.

இப்போது அயலான் திரைப்படம் மூலம் மீண்டும் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு பொங்கல் ட்ரீட் கொடுத்துள்ளார். விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் அயலானுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. முதல் நாளில் கேப்டன் மில்லர் படத்தின் வசூலை விட பின் தங்கியிருந்த அயலான், இப்போது மாஸ் காட்டி வருகிறது. அதன்படி முதல் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கேஜேஆர் ஸ்டூடியோஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில், நேற்றுடன் பொங்கல் விடுமுறை முடிவுக்கு வந்ததால், திரையரங்குகளில் அயலான் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. இதனால், 6வது நாளான நேற்று அயலான் 6 முதல் 8 கோடி ரூபாய் வரை ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் 6 நாட்களில் அயலான் மொத்த வசூல் 60 முதல் 64 கோடி ரூபாய் இருக்கும் என சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தன. அதேபோல், அயலான் படமும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்தாண்டு வெளியான மாவீரன் திரைப்படமும் 90 கோடி ரூபாய் வரை கலெக்‌ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 21 படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதன் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X