3வது குழந்தைக்கு அப்பாவான அயலான் இயக்குநர்.. நால்வர் ஐவரானோம் என மகிழ்ச்சி போஸ்ட்!

சென்னை: இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கிய இயக்குநர் ரவிக்குமாருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. அந்த மகிழ்ச்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்டாக பதிவிட்டுள்ளார். அவருக்கு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் குறும்பட இயக்குநராக பங்கேற்ற ரவிக்குமார் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அதில் வெற்றிப் பெற்ற நலன் குமாரசாமியுடன் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

Ayalaan director R Ravikumar turns father for 3rd baby
Photo Credit:

சூது கவ்வும் படத்தில் பணியாற்றிய ரவிக்குமார் அதன் பின்னர், விஷ்ணு விஷாலை வைத்து 2015ம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தை இயக்கினார். தமிழில் ஒரு டைம் டிராவல் படத்தை பக்கா எமோஷன் உடன் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து பாராட்டுக்களை அள்ளினார்.

தாமதமான அயலான் ரிலீஸ்: இன்று நேற்று நாளை படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து ஏலியன் படத்தை ஆரம்பித்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசை என பெரும் பில்டப் உடன் தொடங்கிய படம் சுமார் 5 வருடங்களாக ரிலீஸுக்கு ரெடியாகாமல் காலதாமதம் ஆனது. ஒரு வழியாக கடந்த 2024ம் ஆண்டு அயலான் திரைப்படம் வெளியானாலும் பெரிதாக வெற்றிப் பெறவில்லை. அயலான் படத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என கடுமையாக ரவிக்குமார் உழைத்து வருகிறார்.

3வது குழந்தை: இன்று நேற்று நாளை படம் வெளியான பிறகு பிரியா கணேசன் என்பவரை 2016ம் ஆண்டு ரவிக்குமார் திருமணம் செய்துக் கொண்டார். அவருக்கு 2018ம் ஆண்டு மகள் பிறந்தார். அதன் பின்னர், 2024ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில், தற்போது 3வது குழந்தையும் பிறந்துள்ளது. மீண்டும் அவருக்கு இன்னொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. "மகனார் பிறந்திருக்கிறார். நால்வர் ஐவரானோம்!" என அழகான பென்சில் ஸ்கெட்ச் மோடில் போட்டோ ஒன்றை ஷேர் செய்து தனது மகிழ்ச்சியை ரவிக்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் போலவே: அயலான் பட இயக்குநருக்கு 3வது குழந்தை பிறந்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு மகள், அடுத்தடுத்து 2 மகன்கள் பிறந்ததை போலவே அயலான் பட இயக்குநருக்கும் அப்படியே குழந்தை பிறந்துள்ளதே செம Co Incedence என ரசிகர்கள் குறிப்பிட்டும் வாழ்த்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X