Ayalaan: “சிவகார்த்திகேயனின் அயலான் படத்தால் இழந்தது இதுதான்..” இயக்குநர் ரவிக்குமார் கண்ணீர்!!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் பிரபலமான ரவிக்குமார் அயலானை இயக்கியுள்ளார்.

அயலான் தான் இயக்குநர் ரவிக்குமாரின் இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தப் படம் தாமதமானதால், தான் இழந்தது என்ன என்பது குறித்து இயக்குநர் ரவிக்குமார் மனம் திறந்துள்ளார்.
அயலான் இயக்குநர் கண்ணீர்
இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். 2015ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவான இன்று நேற்று நாளை, விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தில் இணைந்தார் ரவிக்குமார். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன், இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் ஆகியோர் கமிட்டாகினர். இந்தப் படமும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து உருவாகி வந்தது. ஆனால், பட்ஜெட் பிரச்சினை, கொரோனா ஊரடங்கு போன்றவற்றால் கிடப்பில் போடப்பட்டது.
டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் அயலானில் கவனம் செலுத்திய சிவகார்த்திகேயன், ஒருவழியாக படத்தை முடித்துவிட்டார். இந்நிலையில், இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட அயலான், தற்போது 2024 பொங்கலுக்கு ரிலீஸாகிறது. கிராபிக்ஸ் வேலைகளுக்கு கூடுதலாக நாட்கள் தேவைப்பட்டதால், ரிலீஸை தள்ளி வைத்தது படக்குழு. இதனால் அயலான் டீசர் மட்டும் கடந்த மாதம் வெளியானது.
இந்நிலையில், அயலான் உருவானது குறித்து இயக்குநர் ரவிக்குமார் பேட்டிக் கொடுத்துள்ளார். அதில், ஒரு படத்திற்காக 6 ஆண்டுகள் வரை காத்திருந்தது கொஞம் கஷ்டமாக தான் இருந்தது எனக் கூறியுள்ளார். மேலும், இந்தக் காலக்கட்டத்தில் இரண்டு படங்களை இயக்கியிருக்கலாம் எனவும், அதனால் பணமும் சம்பாதித்திருக்கலாம் என்றும் பலர் அட்வைஸ் செய்தனர். ஆனால், அயலான் படத்தால் நான் இழந்தது பணமோ நேரமோ இல்லை என ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
பணத்துக்காக சினிமாவிற்கு வந்தவன் நான் இல்லை எனக் கூறிய ரவிக்குமார், அயலான் பார்த்துவிட்டு நல்லா இருக்குன்னு சொன்னால் மட்டும் போதும் என்றுள்ளார். அதேநேரம் அயலான் ரிலீஸுக்கு முன்பே என் அம்மாவை இழந்தது தான் பேரிழப்பு என கண்ணீருடன் பேசியுள்ளார். திடீரென அம்மாவுக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவசரமாக ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டியிருந்தது.
ஆனால், சிகிச்சை பலனில்லாமல் அம்மா இறந்துவிட்டதாக தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், அம்மா இறப்பதற்கு முன்பாக அயலான் டீசரை அவர்களுக்கு போட்டுக் காட்டியதாகவும், அதனை பார்த்துவிட்டு ஆங்கிலப் படம் மாதிரி இருக்குன்னு பாராட்டியதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இருப்பினும் அயலான் படத்தை அம்மாவுக்கு முழுவதும் போட்டுக் காட்ட முடியவில்லை என வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக அயலான் டீசர் வெளியீட்டு விழாவில், இந்தப் படத்திற்காக ரவிக்குமார் ரொம்பவே பொறுமையாக உழைத்தார் எனவும், அவருக்காக இன்னொரு படத்தில் உடனடியாக இணைவேன் எனவும் மேடையிலேயே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











