Just In
- 11 min ago
சந்திரமுகி 2 வருமா வராதா? லாரன்ஸ் சொன்ன பதில்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 57 min ago
என் வீட்டு கப்போர்டில் எலும்புக்கூடுகள் இல்லை.. நான் ஏன் பயப்பட வேண்டும்.. டாப்ஸி அதிரடி!
- 1 hr ago
தங்கச் சிலையே தோற்றுப் போகும் அழகு…முன்னணி நடிகையை வர்ணிக்கும் ரசிகர்கள்!
- 1 hr ago
தோட்டாக்களை தெறிக்க விட்டு தல அஜித்… துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று சாதனை !
Don't Miss!
- News
ஓவர்நைட்டில் "கேம் சேஞ்ச்".. ஒரே குறி எடப்பாடியார்தான்.. ஸ்கெட்ச் போடும் திமுக.. களமிறங்கும் கருணாஸ்
- Education
UPSC 2021: ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யுபிஎஸ்சி அறிவிப்பு!!
- Finance
ஆன்லைனில் எப்படி ஆதார் முகவரி மாற்றம் செய்வது..!
- Sports
பெண்களுக்கு உயிரை சுமக்கும் வாய்ப்பை கடவுள் கொடுக்க காரணம்... விராட் கோலி சிலிர்ப்பு
- Lifestyle
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- Automobiles
சிஎன்ஜி வெர்சனில் தயாராகும் ஸ்கோடா ரேபிட் செடான் கார்!! சோதனையில் இருப்பதாக தகவல்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ரெண்டாவது லட்டு.. அயலான் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்னைக்கே ரிலீஸ் ஆகுது!
சென்னை: சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் இன்றே ரிலீசாகும் என்ற அறிவிப்பு தற்போது டிரெண்டாகி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை 11:03க்கு சிவகார்த்திகேயன் பிறந்த நாள் பரிசாக வெளியானது.
அயலான் படத்தின் ஃபர்ஸ் லுக் வேண்டும் என தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து, அயலான் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 7:07க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடடா.. சன்னி லியோனுக்கு எவ்ளோ பெரிய மனசு.. என்ன காரியம் பண்ணியிருக்காங்க பாருங்க!

சிவகார்த்திகேயன் பேனர்
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ் உள்ளிட்ட படங்களை தயாரித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன், முதன்முறையாக தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷனில், தான் நடிக்கும் டாக்டர் படத்தை தயாரித்து வருகிறார். ஹீரோ படத்தை தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் இணை தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

பிறந்த நாள் பரிசு
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கால் பதித்து, முன்னணி நடிகர்களில் ஒருவராக முன்னேறியுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் 35வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தனது பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று காலை சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

ரசிகர்கள் கோரிக்கை
நாற்காலியில் செம கெத்தாக கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள், நீண்ட நாட்களாக உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது அது குறித்த அப்டேட்டாவது இன்று வெளியாகுமா என கோரிக்கை வைத்து வந்தனர்.
|
ரெண்டாவது லட்டு
பிறந்த நாளை முன்னிட்டு சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்று காலை 11:03க்கு வெளியான டாக்டர் ஃபர்ஸ்ட் லுக் முதல் லட்டாக அமைந்த நிலையில், தற்போது, ரெண்டாவது லட்டாக இன்று மாலை 7:07 மணிக்கு அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
|
நரசிம்மா நாயகி
கோவாவில் அயலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தில், நரசிம்மா, நெஞ்சினிலே படங்களில் நாயகியாக நடித்த இஷா கோபிக்கர் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார்.
|
இமான் வாழ்த்துகள்
சிட்டி சப்ஜெக்ட் படங்களுக்கு அனிருத் இசை என்றால், வில்லேஜ் சப்ஜெக்ட் படங்களுக்கு இமான் தான் இசையமைப்பாளர். சிவகார்த்திகேயன் - இமான் இசையில் வெளியான பல பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை என இந்த காம்போ பல படங்களில் தொடர்கிறது. அனிருத்தை தொடர்ந்து, இமானும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
|
சிவகார்த்திகேயன் சிஸ்டர்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான கனா படத்தில் கெளசல்யா முருகேசனாக கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில், பாசமான தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.