Just In
- 7 hrs ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 7 hrs ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 7 hrs ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 7 hrs ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
சங்கமம் கலைநிகழ்ச்சிகளுடன் இன்று மினசோட்டா தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா!
- Automobiles
டாடா ஹாரியர் காரின் விற்பனை அமோகம்... அடுத்து இந்திய சந்தையை கலக்க வருகிறது புதிய சஃபாரி...
- Sports
தம்பிகளா.. அப்படி ஓரமா போய் உட்காருங்க.. இளம் வீரர்களுக்கு நோ சான்ஸ்.. இந்திய அணி முடிவு!
- Finance
யூனியன் பட்ஜெட் 2020-க்காக சிறப்பு ஆப்.. மோடி அரசின் புதிய டிஜிட்டல் சேவை..!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
லாலிபப் ஏலியனுக்கா.. ரசிகர்களுக்கா.. எப்படி இருக்கு அயலான் ஃபர்ஸ்ட் லுக்?
சென்னை: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் 35வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று காலை முதலே சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் நடிகர் சிவகார்த்திகேயனை வாழ்த்தி வந்தனர்.
சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசாக இன்று காலை டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், தற்போது, அயலான் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
|
ஏலியன் படம்
டைம் மெஷின் கதையை காமெடி கலந்து செம சுவாரஸ்யமாக சொன்ன இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம், ஏலியன் சப்ஜெக்ட் படம் என்பது தற்போது வெளியாகி உள்ள ஃபர்ஸ்ட் லுக் மூலம் நூறு சதவீதம் உறுதியாகி உள்ளது.

எம்.ஜி.ஆர் படம்
ஏலியன் சப்ஜெக்டில் தமிழில் உருவாகும் இரண்டாவது படம் அயலான். இதற்கு முன்னதாக எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான கலை அரசி படம் ஏலியன் கான்செப்டில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு பிறகு, பல ஆண்டுகள் கழித்து, தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் படமாக அயலான் உருவாகி இருக்கிறது.

காமெடி படமா?
சீரியஸான சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக அயலான் இருக்கும் என எதிர்பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு, இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, ஏலியன் கையிலும், சிவகார்த்திகேயன் கையிலும் லாலி பப் இருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது, இந்த படமும் இன்று நேற்று நாளை படத்தை போல சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த காமெடி படம் என்று.
|
டாக்டரா? அயலானா?
சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில், டாக்டர் ஃபர்ஸ்ட் லுக்கா? அல்லது அயலான் ஃபர்ஸ் லுக்கா? எது உங்க ஃபேவரைட் ஃபர்ஸ்ட் லுக் என்ற கருத்துக் கணிப்பை ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.
|
இதுதான் நம்ம ரூட்
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வெளியான ஹீரோ திரைப்படம், படு தோல்வியை சந்தித்து, வந்த சுவடே தெரியாமல் காணாமல் போனது. இந்நிலையில், அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், தலைவா இதுதான் நம்ம ரூட்.. ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டரில் ஹோலி கொண்டாடுவாங்க என கமெண்ட் செய்துள்ளார்.
|
5 மொழிகளில்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படம் முதன்முறையாக 5 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும், நிச்சயம் சிவகார்த்திகேயனுக்கு இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் வாழ்த்தி வருகின்றனர்.