ஏ.ஆர்.ரகுமான் பாடிய "வேற லெவல் சகோ" பாடல் நாளை வெளியீடு!
சென்னை: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், சதீஷ் ஆகியோர் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் அயலான்.
Recommended Video

இந்த படத்தை "இன்று நேற்று நாளை" இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாடலை நாளை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவு
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதி ரிலீசுக்கு காத்துள்ளது.

படப்பிடிப்பு தொடக்கம்
அதைத்தொடர்ந்து அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் நடிகர்கள் தேர்வு சமீபத்தில் நிறைவடைந்து பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அது குறித்த புகைப்படங்களும் வெளியானது.

முழுவீச்சில் பணிகள்
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதால் படப்பிடிப்பு முடிய தாமதமாகி வந்த நிலையில், கொரோனா தொற்றால் கால தாமதம் நீண்டது. தற்போது படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வேற லெவல் சகோ
இதையடுத்து நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு "வேற லெவல் சகோ" பாடலை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நாளை காலை 11:03 மணிக்கு வேற லெவல் சகோ பாடல் வெளிவரவுள்ளது.


Click it and Unblock the Notifications











