Ayalaan Release Date: தீபாவளிக்கு வெளியாகும் அயலான்... சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டம்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் அயலான்.
பட்ஜெட் பிரச்சினை, கிராபிக்ஸ் பணிகள் காரணமாக 5 ஆண்டுகளாக கிடப்பில் கிடைந்த அயலான், தற்போது ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது.
இந்தப் படத்தின் அப்டேட் குறித்து படக்குழு சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது அயலான் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுத்துள்ளது.
சிவகார்த்திகேயன் அயலான் ரிலீஸ் அப்டேட்
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆனால், பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது. சிவகார்த்திகேயன் நண்பர் ராஜாவின் 24AM நிறுவனம் தயாரித்து வந்த அயலான், அதன்பின்னர் KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் முடிவுக்கு வந்துள்ளது.

'இன்று நேற்று நாளை' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயன் - ஏஆர் ரஹ்மான் கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத்தி சிங், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ள அயலான், தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் எனக் கூறப்படுகிறது. அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்களும் கேட்டுக் கொண்டே இருந்தனர். இப்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தரமான அப்டேட் கொடுத்துள்ளது அயலான் படக்குழு.
அதன்படி, அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தாண்டு தீபாவளி ரிலீஸில் முதல் படமாக சிவகார்த்திகேயனின் அயலான் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து அயலான் படமும் ரிலீஸாவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக, அயலான் படத்தின் தாமதத்திற்கு என்ன காரணம் என படக்குழு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், அயலான் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளை சமரசம் செய்துகொள்ளாமல் உருவாக்கவே இந்த தாமதம் என குறிப்பிட்டுள்ளது. மேலும், பான் இந்திய படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சிகள் அயலான் படத்தில் உள்ளதாகவும் KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.
அதேபோல், இந்தப் படத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அதிக நாட்களை எடுத்துக்கொண்டதாகவும், அயலானில் வரும் வேற்றுகிரகவாசி கேரக்டர் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் செய்துள்ள Phantom FX நிறுவனம் தான் அயலானுக்கும் CG பணிகளை பார்த்துள்ளது அதிக கவனம் ஈர்த்துள்ளது. அயலான் திரைப்படம் மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசயங்கள் நிறைந்த புதிய உலகிற்கு செல்ல தயாராகுங்கள் என படக்குழு தெரிவித்திருந்தது. அது தற்போது வெளியான அயலான் ரிலீஸ் தேதி போஸ்டரில் உறுதியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த அப்டேட் வெளியான இரண்டே நாட்களில் அயலான் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் அடுத்தடுத்து வெளியானதை போல, இந்தாண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன், அயலான் படங்கள் தொடர்ச்சியாக வெளியாக உள்ளன. இந்நிலையில், டிவிட்டரில் அயலான் ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.


Click it and Unblock the Notifications











