டைட்டிலுக்கே இப்படியா.. எத்தனை ஹேஷ்டேக்ஸ்.. வெறித்தனம் வேற லெவல்ல இருக்கே! #Ayalaan #அயலான்

Recommended Video

Losliya Treat to fans | Friendship | Losliya On Board | Kaithi remade

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் 14வது படத்தின் தலைப்பு இன்று வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 14வது படத்தை நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்குகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் படமான இப்படத்தின் தலைப்பை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இன்று மாலை 5 மணிக்கு வெளியிட்டார்.

டிவிட்டர் ட்ரென்டிங்

டிவிட்டர் ட்ரென்டிங்

படத்திற்கு அயலான் என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக டைட்டிலுக்கான பிஜிஎம் அசத்தலாக இருப்பதாக ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை கொண்டாடும் வகையில் ஏராளமான ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

பெரிய ட்ரீட்

#Ayalaan, #அயலான், #SK14,#Sivakarthikeyan, Alien ஆகிய ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. இந்த ஹேஷ்டேக்குகள் சென்னை ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளன. அயலான் நிச்சயம் ஒரு பெரிய ட்ரீட்டாகதான் இருக்கும். டைரக்டர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனை காண ஆர்வமாய் காத்திருக்கிறோம்.. ஏஆர் ரஹ்மானின் இசையும் சேர்ந்து வெற்றி கூட்டணி ஆன் தி வே என பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

அயலான் பத்திதான் பேச்சு

என் வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள்.. நிச்சயமாக இந்த அயலான் படம் பிளாக் பஸ்டர் படமாகத்தான் இருக்கும், நீங்க ஒத்துக்கொள்கிறீர்களா என கேட்கிறார் இந்த நெட்டிசன். எங்க பார்த்தாலும் அயலான் பத்தின பேச்சு தான்.. தலைவா.. என குறிப்பிட்டுள்ளார் சிவகார்த்திகேயனின் இந்த ரசிகர்.

தரமாதான் இருக்கும்

நம்ம சிவகார்த்திகேயன் அண்ணா... ஹாலிவுட் லெவலுக்கு படம் ரெடி பண்ணி இருக்காருன்னு நினைக்கும்போது!! உள்ளுக்குள்ள புல்லரிக்குது.. நன்றி தலைவா!!! என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். இந்த ஒரு மோஷன் போஸ்டர்க்கே.. ரொம்ப மெனக்கட்டு ரெடி பண்ணி இருக்காங்க #அயலான் டீம்.. கண்டிப்பாக.. அடுத்து வர ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர், டீசர், ட்ரெயிலர் ஆடியோ, மூவிஸ் எல்லாம் தரமாதான் இருக்கும் என்று கூறியுள்ளார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X