twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொல மாஸான அயலான் மேக்கிங் வீடியோ.. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி !

    |

    சென்னை : சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

    இன்று நேற்று நாளை படத்தை இயக்கி ஆர் ரவிக்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார்.

    பிக்பாஸ் சீசன் 5 ல் நான் இருக்கேனா? இல்லையா?...தெளிவாக விளக்கிய கனி பிக்பாஸ் சீசன் 5 ல் நான் இருக்கேனா? இல்லையா?...தெளிவாக விளக்கிய கனி

    இதில் சிவகார்த்திக்கு ஜோடியாக நடிகை ராகு பீரீத் சிங் நடித்துள்ளார். மேலும்,இஷா கோபிகர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

    வித்தியாசமான கதை

    வித்தியாசமான கதை

    கடந்த ஓராண்டாக படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த அயலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள், டப்பிங் வேலைகள் சமீபத்தில் தொடங்கிய உள்ளதாக அண்மையில் படக்குழு அறிவித்தது. இன்று நேற்று நாளை என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய ரவிக்குமார். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை கையில் எடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

    கிராபிக்ஸ் காட்சிகள்

    கிராபிக்ஸ் காட்சிகள்

    அதே போல அயலான் படமும் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகி உள்ளது. அதற்காக அதி நவீன தொழில்நட்பத்தை பயன்படுத்தி பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அயலான் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    முன்னணி நடிகர்கள்

    முன்னணி நடிகர்கள்

    இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் பிரீத் சிங் முதல்முறையாக இணைந்துள்ளனர். மேலும், கருணாகரன், பாலசரவணன், பானுப்பிரியா, யோகி பாபு என பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழு அண்மையில் தெரிவித்தது.

    வைரல்

    இந்நிலையில் அயலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் வெவ்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட காட்சிகள், இயற்கை எழில் சூழ காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ரவிக்குமார் சிவகாத்திகேயனுக்கு சூழ்நிலையை எடுத்து கூறவது போன்ற காட்சி இதில் அமைந்துள்ளது. இந்த மேக்கிங் வீடியோ ரசிகர்களிடையே தற்போது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது.

    English summary
    Ayalaan making video out
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X