Ravikumar: கருணையை வைத்து படத்தை ஓட்ட முடியாது.. தெளிவாக சொன்ன அயலான் இயக்குநர்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அயலான்.
நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருந்த அயலான் படம், பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ப்ரமோஷன்களை படக்குழு துவங்கியுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் ரவிக்குமார் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் அயலான். இந்தப் படம் கடந்த 2018ம் ஆண்டிலேயே துவங்கப்பட்ட நிலையில், சிஜி வேலைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது. தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ளதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பொங்கல் கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ரவிக்குமார்: முன்னதாக இன்று நேற்று நாளை என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை கொடுத்திருந்தார் இயக்குநர் ரவிக்குமார். டைம் டிராவலை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தன்னுடைய இரண்டாவது படமான அயலான் படத்திலும் சயின்ஸ் பிக்ஷன் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கி முடித்துள்ளார் ரவிக்குமார். ஏலியனை மையமாக கொண்டு அயலான் படம் உருவாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர்: இந்தப் படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், 6 ஆண்டுகள் ஒரு படத்திற்காக வேலை செய்தது குறித்து ரவிக்குமார் தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். இந்தப் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பாராட்டினால் அதுவே தனக்கு போதும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படம் குறித்து பேசுவதற்கு அதிகமான விஷயங்கள் இருந்தாலும் அதைக் கொண்டு ப்ரமோட் செய்ய தனக்கு விருப்பமில்லை என்றும் ரவிக்குமார் கூறியுள்ளார்.
ரவிக்குமார் இன்டர்வியூ: முன்னதாகவே தன்னுடைய வேலையை முன்வைத்து பேசுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், இதன் காரணங்களால்தான் படம் தாமதமானது என்பது போல பேசி ரசிகர்களின் கருணையை ஈட்ட தான் விரும்பவில்லை என்றும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் படத்தை ரசிகர்கள் கொண்டாடும் நேரத்தில் தன்னுடைய வேலைகளை குறித்து தான் பேச விரும்புவதாகவும் ரவிக்குமார் தெவித்துள்ளார்.
சமரசம் செய்துக் கொள்ளாத இயக்குநர்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இன்று நேற்று நாளை படத்தின்மூலம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அவரது அடுத்தப்படமான அயலான் படமும் மிகச்சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் எந்த விஷயத்தையும் சமரசம் செய்துக் கொள்ளாமல் வேலை செய்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











