Ayalaan :அயலான் படத்தோட இரண்டாவது பாகம் கண்டிப்பாக உருவாகும்.. தயாரிப்பாளர் உறுதி!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் லீட் கேரக்டரில் நடித்துள்ள படம் அயலான். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட அயலான் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சயின்ஸ் பிக்ஷன் அடிப்படையில் அயலான் படம் உருவான நிலையில், நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்தப் படத்தின் மேக்கிங் தொடர்ந்து தாமதமானது.

Ayalaan movie producer hopes sequel of the movie to be planning soon

அயலான் படத்தின் இரண்டாவது பாகம் : நடிகர் சிவகார்த்திகேயன் பிசியான நடிகராக தமிழில் இருந்து வருகிறார். அவரது டாக்டர், டான் படங்கள் சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், பிரின்ஸ் படம் சொதப்பியது. தொடர்ந்து அவரது நடிப்பில் மாவீரன் படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அதிதி ஷங்கர் ஜோடியாகியுள்ளார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக களமிறங்கியுள்ளார்.

நடிகை சரிதா இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் இந்தப் படம் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரத் சங்கர் இசையமைப்பில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த பிப்ரவரியில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புடன் படத்தின் மேக்கிங் வீடியோவையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளாக ரிலீசுக்காக காத்திருந்த அயலான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டின் தீபாவளி ரிலீசாக இந்தப் படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

Ayalaan movie producer hopes sequel of the movie to be planning soon

கடந்த 2016ம் ஆண்டில் இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், 2018ம் ஆண்டில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டது. வேற்றுகிரக வாசியை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் வடிவமைக்கப்பட்ட நிலையில், படத்தின் போஸ்டர்களும் இதை உறுதி செய்தன. படத்திற்கு அயலான் என்று பெயரிடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. படத்தில் யோகிபாபு, கருணாகரன், இஷா கோபிகர், பால சரவணன் உள்ளிட்டவர்களும் இணைந்தனர்.

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வெளியான வேற லெவல் சகோ பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் சிஜி வேலைகள் உள்ளிட்டவையும் நிறைவடைந்து படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்ட ஆண்டுகளாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைதுள்ளனர். இந்நிலையில், இந்தப் படம் குறித்து பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர், இந்தப் படத்தின் ஏலியன் கேரக்டரை உருவாக்குவதற்காக 2 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த ஏலியன் கேரக்டருக்கு எமோஷன்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வருவதற்காக சிஜி வேலைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விரைவில் அதுகுறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தப் படத்திற்காக 3500க்கும் மேற்பட்ட சிஜி வேலைகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பேட்டியொன்றில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X