Sivakarthikeyan - அயலானில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்த சிவகார்த்திகேயன்?.. வேற லெவல் கூட்டணியா இருக்கே

மும்பை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்தியேன் நடித்திருக்கும் அயலான் படம் குறித்து புதிய தகவல் வெளியாகி ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் கடைசியாக அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். அவர் இதற்கு முன்னதாக நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் பெரும் அப்செட் ஆனதாக கூறப்பட்டது.

Ayalaan Movie Released By amir khan in hindi language

மாவீரனில் நடிக்கும் சிவகார்த்திகேயன்: பிரின்ஸ் படம் கொடுத்த அடிக்கு அடுத்ததாக மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயகக்த்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனின் கரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.

அயலான் சிவகாரத்திகேயன்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

வெளியான அயலான் அப்டேட்: இந்தச் சூழலில் அயலான் படத்தின் தாமதம் குறித்து நேற்று பட தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்திருந்தது. அதில், அயலான் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை சமரசம் செய்துகொள்ளாமல் உருவாக்கவே இந்த தாமதம். பான் இந்திய படங்களுக்கு நிகரான கிராஃபிக்ஸ் காட்சிகள் அயலான் படத்தில் உள்ளது.

Ayalaan Movie Released By amir khan in hindi language

இந்தப் படத்தை கச்சிதமாக முடிக்க வேண்டும் என்பதற்காக அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டது. அயலானில் வரும் வேற்றுகிரகவாசி கேரக்டர் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. முக்கியமாக 4500 VFX காட்சிகளைக்கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சூப்பர் ஸ்டாருடன் கூட்டணி: இந்நிலையில் அயலான் படம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. அதாவது அயலான் படத்தை பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கான் ஹிந்தியில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமீர் கானின் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை ஹிந்தியில் வெளியிடுகிறது என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X