Just In
- 3 hrs ago
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- 3 hrs ago
ஏன் ஆளு பண்டாரத்தி.. எடுப்பான செம்பருத்தி.. வெளியானது கர்ணன் படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக்!
- 3 hrs ago
ரியல் ஹீரோவான மாதவன் மகன்.. நீச்சல் போட்டியில் இந்தியாவுக்காக வெண்கலப் பதக்கம் வென்று அசத்தல்!
- 3 hrs ago
கமல் ஸ்டைலில் ஆடை பிராண்ட் ஆரம்பித்த பிக்பாஸ் பிரபலம்.. பேர பாத்தீங்களா.. வேற லெவல்!
Don't Miss!
- News
ஹத்ராஸ் கொடூரத்தைவிட.. உங்களுக்கு தேர்தல் முக்கியமாகிவிட்டதே.. யோகியை போட்டு தாக்கும் நுஸ்ரத் ஜஹான்
- Finance
டாடா நெக்சான் எலக்ட்ரிக் காருக்கு மானியம் இல்லை.. டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு..!
- Automobiles
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Lifestyle
ஆரோக்கியத்திற்காக நீங்க சாப்பிடும் இந்த நட்ஸ் வகை உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துமாம்...ஜாக்கிரதை!
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அயலான் படத்தின் அசத்தல் அப்டேட்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. தெறிக்கும் டிவிட்டர்! #Ayalaan
சென்னை: அயலான் படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வி.. கவர்ச்சி போட்டோக்களை அதிரடியாய் டெலிட் செய்த ஷிவானி நாராயணன்!
இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்திருக்கிறார். மேலும் கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

லாக்டவுன் காரணமாக..
அயலான் படம் சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி உள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக தடைபட்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

நிறைவடைந்த படப்பிடிப்பு
இதனை தொடர்ந்து சில ரிலாக்ஸேஷன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.

ஏலியன் கையில் லாலிபப்
இதனை நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி உள்ளார். ஏலியன் கையில் லாலிபப்புடன் இருக்கும் வகையில் அயலான் Shoot wrapup என டிசைன் செய்யப்பட்டுள்ளது கேக்.

படக்குழுவுக்கு வாழ்த்து..
இதனை மொத்த டீம்முடனும் சேர்ந்து வெட்டி கொண்டாடியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் சிவகார்த்திகேயனுக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டிசம்பரில் ரிலீஸ்?
மேலும் #Ayalaan என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரென்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரென்ட்டிங்கில் டாப்பில் உள்ளது. இதனிடையே அயலான் படத்தை டிசம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.