அட்டகாசமான கிராஃபிக்ஸ்.. படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும்.. அயலான் சீக்ரெட்டை உடைத்த எடிட்டர்!
சென்னை : இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான்.
இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். அறிவியல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
அயலான் திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக இருக்கும் என்று படத்தின் எடிட்டர் கூறியுள்ளார்.

ஹாலிவுட்டில் பல படங்கள்
பூமியைப் போன்று வேறு கிரகத்தில் வாழும் உயிரினங்களை ஏலியன் என்று அழைப்பார்கள். அந்த உயிரினங்கள் மனிதனை விட புத்திசாலிகளாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு படங்கள் ஹாலிவுட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அயலான்
தமிழில் வேற்று கிரகவாசிகள் என சொல்வதை ஹாலிவுட்டில் ஏலியன்ஸ் என்கிறார்கள். வேற்றுகிரக வாசிகளுக்கு இன்னொரு சுத்தமான தமிழ் பெயர்தான் அயலான். ஏலியன் போன்ற திரைப்படங்களுக்கு செலவுகள் அதிகமாகும் என்பதால் , இதுபோன்ற திரைப்படங்கள் தமிழில் வந்தது இல்லை. பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே வந்துள்ளன.

ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயின்
டைம் மிஷினை மையமாக வைத்து இன்று நேற்று நாளை என்ற படத்தை இயக்கிய ரவிகுமார் அயலான் திரைப்படத்தை இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயன் நாயகனாகவும், ரகுல் ப்ரீத் சிங் நாயகியாகவும், கருணாகரன், யோகிபாபு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

பிரமாண்டமான சயின்ஸ் பிக்ஷன்
அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், அத்திரைப்படத்தின் கம்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தமிழின் பிரமாண்டமான சயின்ஸ் பிக்ஷன் படமாக அயலான் திரைப்படம் உருவாகிறது. படத்தில் அதிகளவிலான விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன.

ஹாலிவுட் தரத்திற்கு
இந்நிலையில்,இத்திரைப்படத்தின் எடிட்டர் ரூபன் கூறுகையில், பலமான டெக்னிக்கல் டீமுடன் தயாராகி வரும் இப்படத்தில் கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என்றும், சிவகார்த்திகேயனின் கெரியரில் முக்கியமான படமாக இப்படம் இருக்கும் என்றும், அவரை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாகவும் அயலான் அமையும் எனவும் கூறியுள்ளார்.

டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து ரிலீசுக்கு தயாராகி உள்ள படம் டான். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கி உள்ளார். டாக்டர் படத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார் பிரியங்கா மோகன். கல்லூரி கதைக்களத்தில், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனும் சூரியும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











