இன்னுமா முடியல.. அயலான் ரிலீஸ் எப்போது?.. சிவகார்த்திகேயன் சொல்வது என்ன?

சென்னை: அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் மௌனம் கலைத்துள்ளார்.

சின்னத்திரை போட்டியாளராக கலந்துகொண்டு தொகுப்பாளராக மாறி பின்னர் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தமிழின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இப்போது இருக்கிறார். அவருக்கென்று சிறுவர்கள், சிறுமிகள் ரசிகர் ரசிகைகளாக இருக்கின்றனர்.

 100 கோடி கிளப்பில் சிவகார்த்திகேயன்

100 கோடி கிளப்பில் சிவகார்த்திகேயன்

ஆரம்பத்தில் தடுமாறிய சிவகார்த்திகேயன் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டார். கதை தேர்வில் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்ட அவர் அந்தப் பாதையில் சிறப்பாகவே பயணித்துவருகிறார். அந்தவகையில் அவர் நடித்த டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என பலரால் கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சி அப்படி கணித்தவர்களுக்கு அதிர்ச்சியாகவே அமையும்.

செம அடி வாங்கிய பிரின்ஸ்

செம அடி வாங்கிய பிரின்ஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்தார். இரண்டு படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் மரண அடி வாங்கியது. அதுமட்டுமின்றி ஒரு வாரத்துக்குள்ளாகவே திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது. இதனால் சிவகார்த்திகேயன் பெரும் அப்செட் ஆனதாக கூறப்பட்டது.

மாவீரனில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

மாவீரனில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

பிரின்ஸ் படம் கொடுத்த அடியால் தனது அடியை நிதானமாக எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அதன்படி மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் தற்போது நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக கமல் ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயகக்த்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனின் கேரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும் என கருதப்படுகிறது.

அயலானுக்கு என்னதான் ஆச்சு?

அயலானுக்கு என்னதான் ஆச்சு?

இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

எப்போது ரிலீஸ்? மௌனம் கலைத்த சிவா

எப்போது ரிலீஸ்? மௌனம் கலைத்த சிவா

ஒருகட்டத்தில் அயலான் என்ற படம் இருக்கிறது என்ற நினைவே எஸ்கே ரசிகர்களிடமிருந்து அழியும் சூழல் உருவானது. இந்நிலையில் அயலான் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்து சிவகார்த்திகேயன் பதிலளித்திருக்கிறார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அயலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிட்டன. தற்போது கிராஃபிக்ஸ் பணிகள் நடந்துவருகின்றன. இந்த வருட இறுதிக்குள் படம் ரிலீஸாகும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X