Ayalaan - அயலா அயலா.. வெளியானது அயலான் படத்தின் இரண்டாவது சிங்கிள்.. ரசிகர்கள் கொண்டாட்டம்
சென்னை: Ayalaan Second Single (அயலான் இரண்டாவது சிங்கிள்) சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.
சிவகார்த்திகேயன கடைசியாக நடித்திருந்த படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதற்கு அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கமல்ஹாசன் படத்தை தயாரிக்கிறார்.

அயலான்: இதற்கிடையே பல வருடங்களுக்கு முன்பே அயலான் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் சிவகார்த்திகேயன். இன்று நேற்று நாளை படத்தின் மூலம் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் இந்தியாவின் முதல் ஏலியன் படமாக அயலான் உருவாகியிருக்கிறது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
இந்தப் படம் வெளியாகி வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கொரோனா காரணமாக முதலில் படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டன. அதன் பிறகு கிராஃபிக்ஸ் பணிகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முதலில் கூறப்பட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
பொங்கலுக்கு ரிலீஸ்: படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அறிவிப்பு வந்தவுடன் சிவாவின் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியிலும் எதிர்பார்ப்பிலும் இருந்தனர். சூழல் இப்படி இருக்க படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போனது. அதன்படி படமானது பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. ஏலியன்களை பற்றிய படம் என்பதால் கண்டிப்பாக கொண்டாட்டத்துக்கு குறை இருக்காது என்றே ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
செகண்ட் சிங்கிள்: இந்நிலையில் அயலான் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான 'அயலா அயலா நீ' பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை விவேக் எழுத; நரேஷ் ஐயரும், ஹ்ரிதாய் கட்டானியும் பாடியிருக்கின்றனர். இது ஏலியனை புகழும்படியான பாடலாக அமைந்திருக்கிறது. கண்டிப்பாக இந்தப் பாடல் தியேட்டரில் பெரும் கொண்டாட்டத்தை தரும் என எஸ்கே ரசிகர்கள் கூறிவருகிறார்கள்.
கடும் போட்டி: இதற்கிடையே அயலான் படம் ரிலீஸாகும் பொங்கலுக்கு தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர், சுந்தர். சி இயக்கியிருக்கும் அரண்மனை 4 ஆகிய படங்களும் ரிலீஸாவதால் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியிருக்கும் லால் சலாம் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனாலும் ஆகலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











