Ayalaan: அயலான் இயக்குநரை கார்னர் செய்த ஜிகர்தண்டா ஹீரோ... புதிய கூட்டணியில் மிரட்டலான சம்பவமா..?
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ரவிக்குமார் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளார். இந்நிலையில் தற்போது திடீரென ஜிகர்தண்டா ஹீரோவுடன் கூட்டணி வைக்கவுள்ளாராம் ரவிக்குமார்.
அயலான் இயக்குநரின் புதிய கூட்டணி: இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். முதல் படத்திலேயே சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஒரு கலக்கு கலக்கினார். அட்டகாசமான திரைக்கதை, சூப்பரான மேக்கிங் என அசரடித்த ரவிக்குமாருக்கு மிகப் பெரிய ஓபனிங் கிடைத்தது. அதன்பின்னர் அவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் கமிட்டானார்.

சிவகார்த்திகேயன், ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான், நீரவ்ஷா என மெகா கூட்டணியில் தொடங்கிய அயலான், பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே முடங்கியது. இன்னொரு பக்கம் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் அயலான் பாதியில் ட்ராப் ஆனது. ஆனால், அயலான் கண்டிப்பாக வெளியாக வேண்டும் என சிவகார்த்திகேயனும் ரவிக்குமாரும் எடுத்த முயற்சிக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது.
அதன்படி 2018ல் தொடங்கிய அயலான் அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. முன்னதாக இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு, பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. அயலான் படத்தின் செகண்ட் சிங்கிள் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக அயலான் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ரவிக்குமார் குறித்து சிவகார்த்திகேயன் ரொம்பவே நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.
அயலான் படத்துக்காக 5 ஆண்டுகள் பொறுமையாக உழைத்தது ரவிக்குமார் தான். இதற்காகவே மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக சிவகார்த்திகேயன் கூறியிருந்தார். இதனால் அயலான் ரிலீஸுக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் ரவிக்குமாரின் புதிய படம் பற்றி அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், சூர்யாவுக்கும் ஒரு கதை ரெடி செய்து வைத்திருந்தார் ரவிக்குமார்.
சூர்யா - ரவிக்குமார் படமும் விரைவில் உருவாகும் என தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், சிவகார்த்திகேயன், சூர்யா என இருவருமே இல்லாமல் ராகவா லாரன்ஸுடன் இணைகிறாராம் ரவிக்குமார். இதுவரை வழக்கமாக பேய் காமெடி படங்களில் நடித்து வந்த ராகவா லாரன்ஸ், சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மூலம் கம்பேக் கொடுத்தார். இதனால் ராகவா லாரன்ஸின் மார்க்கெட் மீண்டும் உச்சம் தொட்டுள்ளது.
அதனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போல இன்னொரு வித்தியாசமான படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளாராம். அதற்கு ரவிக்குமார் தான் சரியான ஆள் என டார்கெட் செய்த ராகவா லாரன்ஸ், அவரை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரவிக்குமாரும் ராகவா லாரன்ஸுடன் இணைய க்ரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், இந்தக் கூட்டணி பற்றி அபிஸியல் அப்டேட்ஸ் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications