Ayalaan: வடிவேலுவுக்கு நோ சான்ஸ்... அயலான் படத்தில் இணைந்த சித்தார்த்... இதுதான் விஷயமா..?
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் சித்தார்த் இணைந்துள்ளதாக படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயலானில் இணைந்த சித்தார்த்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம், அடுத்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முடியாததால் அயலான் ரிலீஸ் தேதி பொங்கலுக்கு மாற்றப்பட்டது.

இன்று நேற்று நாளை திரைப்படம் மூலம் பிரபலமான ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கியுள்ளார். இன்று நேற்று நாளை படத்தை சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் டைம் ட்ராவலை பின்னணியாக வைத்து இயக்கியிருந்தார் ரவிக்குமார். அதேபோல் அயலான் படத்தையும் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தியளவிலும் அயலான் தான் முதல் ஏலியன்ஸ் படம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அயலான் படத்தில் நடிகர் சித்தார்த் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து ரிலீஸாகவுள்ள நேரத்தில் சித்தார்த் எதற்காக இணைந்தார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதாவது அயலான் படத்தில் வரும் ஏலியன்ஸ் கேரக்டருக்கு சித்தார்த் தான் டப்பிங் கொடுத்துள்ளாராம். அயலான் டீசரில் சிவகார்த்திகேயனுடன் ஏலியன்ஸ் ஒன்றும் அட்ராசிட்டி செய்திருந்தது. அதற்கு சித்தார்த்தை வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்துள்ளார் இயக்குநர் ரவிக்குமார்.
முன்னதாக இந்த ஏலியன்ஸ் கேரக்டருக்கு வடிவேலு டப்பிங் கொடுக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அவருக்குப் பதிலாக தற்போது சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளார். இதனால் அயலான் படத்தில் ஏலியன்ஸ் கேரக்டர் ரசிகர்களுக்கு இன்னும் சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்திருந்தார்.
இப்போது அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்காக சித்தார்த்தும் தனது வாய்ஸ் ஓவர் மூலம் சப்போர்ட் செய்திருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அயலான் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் எனவும், அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











