Ayalaan: “அயலான் வெற்றிக்காக வலியை ஏத்துக்குறேன்..” திடீரென எமோஷனலான சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்கும் இயக்கியுள்ள திரைப்படம் அயலான். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பல தடைகளை கடைந்து இன்று வெளியானது. கடைசி நேரம் வரை அயலான் ரிலீஸாவதில் சிக்கல்கள் இருந்தன. இந்நிலையில், எல்லா பிரச்சினைகளையும் கடந்து அயலான் தற்போது வெளியானதை அடுத்து, சிவகார்த்திகேயன் எமோஷனலாக ட்விட் போட்டுள்ளார்.
திடீரென எமோஷனலான சிவகார்த்திகேயன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள அயலான் திரைப்படம் சொன்னப்படி இன்று வெளியாகியுள்ளது. கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவிருந்த அயலான், கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால் பொங்கல் ரிலீஸுக்கு மாற்றப்பட்டது. ஆனாலும், இந்தப் படத்திற்கு தொடர்ந்து ஃபைனான்ஸ் பிரச்சினைகள் இருந்ததால் சொன்னபடி ரிலீஸாகுமா என சந்தேகம் இருந்தது.

இன்று நேற்று நாளை படம் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவிக்குமார், தனது இரண்டாவது படமாக அயலானில் கமிட்டானார். அதன்படி 2018ம் ஆண்டு அயலான் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்ட 24 AM ஸ்டூடியோ பட்ஜெட் பிரச்சினை காரணமாக திடீரென அயலான் ப்ராஜெக்ட்டை ட்ராப் செய்தது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அப்போது கொரோனா ஊரடங்கும் வந்ததால் அயலான் மொத்தமாக கைவிடப்படும் சூழல் உருவானது. ஆனால், கேஜேஆர் ஸ்டுடியோஸ் அயலான் படத்தை மீண்டும் கையில் எடுத்தது. அதேபோல், இயக்குநர் ரவிக்குமாரும் இந்தப் படத்துக்காக மொத்தம் 5 ஆண்டுகள் வரை தனது உழைப்பை கொடுத்தார். சிவகார்த்திகேயனும் கிடைக்கும் போதெல்லாம் கால்ஷீட் கொடுத்து அயலான் படத்தில் நடித்து முடித்தார்.
இறுதியாக அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகளை முடிப்பதற்காக மட்டுமே படக்குழு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நேரம் எடுத்துக்கொண்டது. ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளதால் தரமான கிராபிக்ஸ் தேவைப்பட்டது. அதன்படி படம் முழுமையாக முடிந்துவிட்டாலும் கடைசி நேரத்தின் ஃபைனான்ஸ் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் சென்னை உயர்நீதிமன்றம் அயலான் வெளியாக இடைக்கால தடையும் விதித்திருந்தது. எனவே அயலான் சொன்னபடி வெளியாகுமா என்பதில் பெரிய சந்தேகம் இருந்தது. இந்நிலையில் அனைத்து பிரச்சினைகளும் முடிந்து அயலான் சொன்னபடி இன்று காலை 9 மணிக்கு வெளியானது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அயலான் படத்தை திரையரங்குகளில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து ரொம்பவே எமோஷனலான சிவகார்த்திகேயன் தனது டிவிட்டரில் போஸ்ட் போட்டுள்ளார். அதில், "ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் வலி நிறைந்த கதை இருக்கும்... ஒவ்வொரு வேதனையான கதைக்கும் வெற்றிகரமான முடிவு உண்டு... வலியை ஏற்றுக்கொண்டு வெற்றிக்கு தயாராகுங்கள்" என பதிவிட்டுள்ளார். மேலும், இன்று வெளியாகும் அயலான் படத்தை உங்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பார்த்து மகிழுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் அயலான் படம் பார்க்க சென்றார் சிவகார்த்திகேயன். அப்போது பேசிய அவர், "அயலானில் புது கன்டெட்ன்ட் காட்டப் போறோங்குற நம்பிக்கை அதிகமா இருக்கு. அயலான் குடும்பத்தோட எல்லோரும் சிரிச்சுப் பாக்குற மாதிரியான தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் மூவி. பொங்கல் கொண்டாட்டத்துக்கு அயலான் படத்த கண்டிப்பா பார்க்கலாம். சயின்ஸ் பிக்ஷன் ப்ளஸ் ஃபேண்டஸி மூவியாக வந்துள்ள அயலான் மாதிரியான படங்கள் நம்மூர்ல வந்தது கிடையாது. சின்ன பட்ஜெட்ல அதிகமான சிஜி காட்சிகளோட அயலான் உருவாகிருக்கு... நம்பி வாங்க சந்தோஷமா போங்க" என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











