பட்ஜெட் பிரச்சினையில் அயலான்... சம்பளம் வாங்காத சிவகார்த்திகேயன்... எல்லாம் அதுக்காக தான்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
இந்நிலையில் ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டீசரை படக்குழு நேற்று வெளியியிட்டது.

சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற அயலான் டீசர் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பட்ஜெட் பிரச்சினை காரணமாக அயலானில் நடிக்க சம்பளம் வாங்கவில்லை எனக் கூறினார்.
அயலானுக்காக சம்பளம் வாங்காத சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அயலான் திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்ட அயலான், கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, அயலான் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. அதேநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லால் சலாம், அரண்மனை 4 படங்களும் வெளியாகின்றன.
இந்நிலையில், அயலான் டீசர் நேற்று வெளியானது. சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்ற டீசர் விழாவில் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் கமிட்டானது முதல், இப்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது ஏன் என்பது வரையிலான அனைத்தையும் மனம் திறந்தார். இயக்குநர் ரவிக்குமாருக்காகவே அயலான் படத்தில் நடித்ததாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் ரவிக்குமார் பார்க்க ரொம்பவே எளிமையாக இருந்தாலும், அவரது ஐடியாவும் மேக்கிங்கும் என்னை பிரமிக்க வைத்தது. அயலான் படத்திற்காக மட்டுமே சுமார் 5 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். இது அவரின் மிகப் பெரிய தியாகம் எனவும் சிவகார்த்திகேயன் பாராட்டினார். தொடர்ந்து பேசிய சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமாருக்கு இன்னொரு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்தினார்.
அதாவது, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்தப் படத்தின் ஷூட்டிங், பட்ஜெட் பிரச்சினை உட்பட பல காரணங்களால் பாதியிலேயே ட்ராப் ஆனது. ஆனால், அயலான் மீது ரவிக்குமாருக்கு இருந்த நம்பிக்கை காரணமாக, இந்தப் படத்திற்கு சம்பளம் வேண்டாம் என மறுத்துவிட்டேன். அதோடு ரவிக்குமாரின் திறமைக்காகவும் அயலானுக்காக அவர் பொறுமையாக இருந்ததற்காகவும், மீண்டும் இன்னொரு படத்தில் அவருடன் இணைகிறேன் என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, டான், பிரின்ஸ் போன்ற ஜாலியான படங்களில் மட்டும் கவனம் செலுத்திய சிவகார்த்திகேயன், முதன்முதலாக சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் நடித்துள்ளார். நேற்று வெளியான அயலான் டீசரை பார்க்கும் போது, சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் செம்ம ஜாக்பாட்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், அயலானுக்காக சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்தது திரையுலகில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











