Ayalaan: அயலான் ரிலீஸுக்கு முன்பே பல கோடி நஷ்டம்... அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்புடன் ரகளையான மினி டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இதனால், அயலான் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே இந்தப் படம் பல கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் ரிலீஸுக்கு முன்பே பல கோடி நஷ்டம்:சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகவுள்ளது. 2017ல் தொடங்கப்பட்ட இந்தப் படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது. 24AM நிறுவனம் தயாரித்து வந்த அயலான், KJR ஸ்டூடியோஸ் பேனருக்கு மாறியதும் அயலான் படப்பிடிப்பு மீண்டும் வேகமெடுத்தது.
இந்நிலையில், தற்போது படப்பிடிப்பை முடித்துவிட்ட அயலான் படக்குழு, தீபாவளி ரிலீஸுக்கு நாள் குறித்துவிட்டது. அதற்குள் கிராபிக்ஸ் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடிக்கும் பணியில் இயக்குநர் ரவிக்குமார் பிஸியாக உள்ளாராம். இதனிடையே தனுஷின் கேப்டன் மில்லர், கார்த்தியின் ஜப்பான் படங்களும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளன.
இதனால், அயலான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் எப்படி இருக்கும் என தெரியவில்லை. இந்நிலையில், ரிலீஸுக்கு முன்பே அயலான் படம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2017ம் ஆண்டு அயலான் படம் ஆரம்பிக்கப்பட்ட போதே, அதன் சாட்டிலைட் ரைட்ஸை சன் டிவி வாங்கிவிட்டதாம். முக்கியமாக அன்றைய தேதிக்கு ஏற்ற விலையில் அயலான் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையாகியுள்ளது.
ஆனால், தற்போது படத்தின் பட்ஜெட் அதிகமானதோடு, 6 வருடங்களுக்குப் பிறகு அயலான் ரிலீஸாகவுள்ளது. இதனால், சாட்டிலைட் ரைட்ஸ் தொகையில் அயலான் படம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாம். ஆனாலும் இதில் இருக்கும் ஒரே ஆறுதல், அயலான் படத்தின் ஓடிடி ரைட்ஸ் மட்டுமே. 2017ல் ஓடிடி தளங்கள் பெரிதாக கவனம் பெறாததால், இப்போது அயலான் படத்துக்கு நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்னர் வெளியான அயலான் மினி டீசர் மிரட்டலாக இருந்ததால், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்தே காணப்படுகிறது. ஆனாலும், கேப்டன் மில்லர், ஜப்பான் படங்களும் தீபாவளி ரேஸில் களமிறங்குவது தான் அயலானுக்கு சோதனையாக அமைந்துள்ளது. இன்று நேற்று நாளை படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிக்குமார், அயலான் படத்தை இயக்கியுள்ளார்.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் நடித்துள்ள அயலான், தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











