Ayalaan: மீண்டும் குட்டீஸ்களுடன் ஆட்டம் போட்ட AR ரஹ்மான்... சிவகார்த்திகேயனின் அயலான் வைப் ஆரம்பம்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷனாக உருவாகியுள்ள அயலான் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஏஆர் ரஹ்மானும் குட்டீஸ்களுடன் ஆட்டம் போட்டு அயலான் ஹைப்பை எகிற வைத்துள்ளார்.

குட்டீஸ்களுடன் ஆட்டம் போட்ட ஏஆர் ரஹ்மான்
மாவீரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த மூவியாக அயலான் ரிலீஸாகிறது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏலியன்ஸ்களை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் முதல் சயின்ஸ் பிக்‌ஷன் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட அயலான் பல தடைகளை கடந்து வெளியாகிறது.

 Ayalaan: Sivakarthikeyan starrer Ayalaan 4th single Maanja Nee is out

இதனால் அயலான் படத்தின் ப்ரொமோஷன்கள் வேற லெவலில் இருக்கின்றன. சென்னை தாஜ் நட்சத்திர விடுதியில் அயலான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அயலான் ட்ரெய்லர் ரிலீஸ் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதுமட்டும் இல்லாமல் இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களில் அயலான் தான் அதிகமான ஸ்க்ரீன்களில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் ப்ரொமோஷன் பேட்டிகளில் அயலான் படம் உருவானது குறித்து பேசியிருந்தனர். இந்நிலையில் தற்போது அயலான் படத்தின் 4வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'மாஞ்சா நீ' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடலை ஏஆர் ரஹ்மானும் சிவகார்த்திகேயனும் இணைந்து எழுதியுள்ளனர். அதேபோல், இப்பாடலை ஏஆர் ரஹ்மானுடன் அவரது மகன் ஏஆர் அமீன் இணைந்து பாடியுள்ளார்.

வெஸ்ட்டர்ன் ஸ்டைலில் உருவாகியுள்ள அயலானின் மாஞ்சா நீ பாடலுக்கு சாண்டி மாஸ்டர் கோரியோகிராப் செய்துள்ளார். முக்கியமாக இப்பாடலில் சிவகார்த்திகேயனுடன் குட்டீஸ்கள் இணைந்து ஆடியுள்ளனர். அவர்களுடன் சர்ப்ரைஸ்ஸாக ஏஆர் ரஹ்மானும் செம்ம ஃபன்னாக டான்ஸ் ஆடி அமர்க்களப்படுத்தியுள்ளார். முன்னதாக மாமன்னன் படத்தில் இடம்பெற்ற 'ஜிகு ஜிகு ரயில்' பாடலில் ஏஆர் ரஹ்மான் டான்ஸ் ஆடி மாஸ் காட்டியிருந்தார். அதன்பின்னர் இப்போது அயலான் படத்தில் ஆட்டம் போட்டுள்ளார் இசைப் புயல்.

பொங்கல் ரேஸில் களமிறங்கும் அயலானுக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் ரிலீஸாகிறது. இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அயலான் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்திற்கு சென்சாரில் யூ சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X