Ayalaan First Review: ஒட்டுமொத்தமா படம் சூப்பர்... ஆனா அதுதான் மிஸ்ஸிங்... அயலான் முதல் விமர்சனம்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வரும் 12ம் தேதி ரிலீஸாகும் அயலான் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில், அயலான் விமர்சனத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி தாறுமாறு எனவும், ஆனால் ஒரேயொரு சம்பவம் மட்டும் சொதப்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயலான் முதல் விமர்சனம்
சின்ன திரையில் இருந்து சினிமாவில் ஹீரோவான சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் தான் சிவகார்த்திகேயனுக்கு முதலில் பிரேக் கொடுத்தது. அதன் பின்னரும் கிராமத்துப் பின்னணி கொண்ட ரஜினி முருகன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் தான் சிவகார்த்திகேயனுக்கு கை கொடுத்தன.

அதனை தவிர்த்துப் பார்த்தால் மான் கராத்தே, ரெமோ, டான், பிரின்ஸ் போன்ற ப்ளே பாய் கதைகளில் நடித்தார். இதனால் ஒருகட்டத்தில் சிவகார்த்திகேயனை கிரிஞ்ச் ஹீரோ என ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன் மாவீரன் படத்தில் வித்தியாசமாக கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக அயலான் உருவாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் முதன்முறையாக சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் நடித்துள்ளதே இதற்கு காரணமாகும். ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இதுதான் இந்திய சினிமாவில் முதல் ஏலியன்ஸ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள அயலான் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
வரும் 12ம் தேதி ரிலீஸாகும் அயலான் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அயலான் கண்டிப்பாக ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகும் என்றாலும் படத்தில் சில மைனஸ்கள் இருப்பதும் உறுதியாகியுள்ளது. இந்தியாவில் விவசாயத்தை சீரழிக்க வில்லன் கும்பல் ஒரு ஏலியனை பூமிக்கு அனுப்புகிறது. சிவகார்த்திகேயனிடம் தஞ்சமடையும் அது, பின்னர் வில்லன்களின் சூழ்ச்சியில் இருந்து தப்பித்ததா என்பது தான் கதை.
மேலும் சிவகார்த்திகேயனும் பூமிக்கு வந்த ஏலியனுடன் சேர்ந்து வில்லன்களுடன் மோதுகிறார். இறுதியாக என்ன நடந்தது என்பதை செம்ம ஜாலியான என்டர்டெயினிங் படமாக உருவாகியுள்ளாராம் ரவிக்குமார். படம் முழுக்க கிராபிக்ஸ் வேலகளில் ஷங்கர், ராஜமெளலி போன்ற ஜாம்பவான் இயக்குநர்களையே ரவிக்குமார் ஓவர்டேக் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்தியாவின் மிகப் பெரிய கிராபிக்ஸ் சினிமாவாக அயலான் இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
அயலான் படத்தின் முதல் பாதி சுமாராக சென்றாலும், இடைவேளைக்குப் பின்னர் மிரட்டலாக உள்ளதாம். இதனால் இரண்டாம் பாதி தாறுமாறாக இருக்கிறது எனவும், திரைக்கதையிலும் இயக்குநர் ரவிக்குமார் மிரட்டிவிட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டும் இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளிலும் செம்ம மாஸ் காட்டியுள்ளாராம். ஆனால், ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் மட்டும் ஒர்த்தாக இல்லை என நெகட்டிவான விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் ஏலியனுக்கு சித்தார்த் டப்பிங் கொடுத்துள்ளதும் ரசிக்கும் படி உள்ளதாம். சிவகார்த்திகேயன், யோகி பாபு, கருணாகரன் கூட்டணியில் காமெடியும் கை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக குழந்தைகளை கூட்டிக்கொண்டு குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட அயலான் படத்தை பார்க்கலாம் என விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











