Ayalaan Review: “இது சிவகார்த்திகேயன் பொங்கல்.. VFX-ல மிரட்டிருக்காங்க” அயலான் டிவிட்டர் விமர்சனம்!
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஒரு வழியாக இன்று வெளியானது. பல தடைகளையும் சில ஃபைனான்ஸ் பிரச்சினைகளையும் கடந்து வெளியான அயலான் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அயலான் முதல் ஷோ பார்த்த நெட்டிசன்கள் இந்தப் படம் பற்றி என்ன சொல்லிருக்காங்கன்னு பார்க்கலாம்.
அயலான் டிவிட்டர் விமர்சனம்
மாவீரனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படம் இன்று வெளியானது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். பல சவால்களை கடந்து ரிலீஸான அயலான் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

அயலான் முதல் ஷோ முடிந்துவிட்ட நிலையில் நெட்டிசன்கள் பலரும் படம் குறித்து டிவிட்டரில் விமர்சனம் செய்துள்ளனர். அதில் ஒருவர், எனது மகன் படத்தை என்ஜாய் செய்து பார்த்தான். அவன் முதன்முதலாக சிரித்து மகிழ்ந்து பார்த்தப் படம் அயலான் தான் என பதிவிட்டுள்ளார். இதற்காக அவர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு நெட்டிசன் அயலான் கிராபிக்ஸ் சூப்பராக வந்துள்ளதாக இயக்குநர் ரவிக்குமாரை பாராட்டியுள்ளார். "பெரிய இயக்குநர்கள் கூட VFX-ல் சொதப்புறாங்க. ஆனா ஒரேயொரு படம் மட்டும் எடுத்துட்டு அடுத்த படத்துல VFX பட்டாசா பண்ணி குடுத்திருக்காரு ரவிக்குமார்" என பதிவிட்டுள்ளார்.
அதேபோல், "இது விஜய், அஜித் படம் FDFS இல்ல, நம்ம அயலான் படத்தோட FDFS போட்டோ. இளம் தலைமுறை மட்டும் இல்லாமல் குடும்பங்கள் கொண்டாடும் FDFS. சிவா அண்ணாவின் அசுர வளர்ச்சி, மக்கள் மனதில் மீண்டும் நிரூபணம்" என நெட்டிசன் ஒருவர் தியேட்டரில் ரசிகர்கள் அயலான் படம் பார்க்கும் போட்டோவுடன் பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார்.

இன்னொரு நெட்டிசனோ, அயலான் Excellent என ஃபையர் எமோஜியுடன், VFX Hatsoff என ஒரே வார்த்தையில் படத்தை பாராட்டியுள்ளார்.
அயலான் படம் குறித்து விமர்சனம் செய்துள்ள இன்னொரு நெட்டிசன், "கண்டிப்பாக அயலான் தான் பொங்கல் வின்னர்" என பாராட்டியுள்ளார். மேலும், "இயக்குநர் ஷங்கரை பீட் பண்ண ஒருத்தன் வந்துட்டான்யா... கண்டிப்பாக அயலான் பாருங்கள்... முதல் பாதி ஜாலியாக செல்கிறது... இரண்டாம் பாதி எமோஷனல், ஆக்ஷன் சீன் எல்லாமே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. க்ளைமேக்ஸ் அல்டிமேட்" என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அயலான் கண்டிப்பாக பொங்கல் கொண்டாட்டத்துக்கான படம் என்றும், இயக்குநர் ரவிக்குமாரின் ஐடியா, ஏலியனை உருவாக்கிய விதம், திரைக்கதை, VFX சும்ம நெருப்பு போல தெறிப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், யோகி பாபுவின் ஒன்லைன் காமெடி செம்ம எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் உச்சத்திற்குப் போய்விட்ட ஒரு நெட்டிசன், "அபிஸியலா சொல்லிடுவேன்... பொங்கல் வின்னர் அயலான் தான்" என படத்துக்கு ஹைப்பை ஏற்றிவிட்டுள்ளார்.
பிரபல சினிமா ட்ராக்கர் ரமேஷ் பாலா, அயலான் முதல் பாதி நன்றாக வந்துள்ளது. சிவகார்த்திகேயன் கேங் காமெடியில் கலக்கியிருப்பதாகவும், ஏலியனை பார்க்கும் போது கிட்ஸ் போல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கருணாகரன், யோகி பாபு காமெடி சூப்பர் எனவும் பாராட்டியுள்ளார்.
அதேபோல், ஏஆ ரஹ்மான் பிஜிஎம், சினிமோட்டோகிராபி, திரைக்கதை, சிவகார்த்திகேயன் நடிப்பு என அனைத்துமே அயலான் படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர். இதனால் இந்த பொங்கலில் சிவகார்த்திகேயனின் அயலான் செம்ம மாஸ் காட்டும் என்பது உறுதியாகியுள்ளது. முக்கியமாக இந்தப் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











