Ayalaan: அயலான் செகண்ட் சிங்கிள் அப்டேட்... ஏஆர் ரஹ்மான் கொடுத்த ஹைப்... ஏலியன்ஸ் வெயிட்டிங்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு அயலான் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை மீண்டும் படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அயலான் செகண்ட் சிங்கிள் அப்டேட்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள திரைப்படம் அயலான். இன்று நேற்று நாளை படம் மூலம் பிரபலமான ரவிக்குமார், அயலானை இயக்கியுள்ளார். 2018ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக பாதி படப்பிடிப்போடு நின்றது. பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாகவும் ட்ராப் ஆகும் நிலையில் இருந்தது.

அதன்பின்னர் மீண்டும் அயலான் படத்தை தொடங்கிய ரவிக்குமார், தற்போது ஷூட்டிங் முடித்து ரிலீஸுக்கும் ரெடி செய்துவிட்டார். இப்போது கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் முழுமையடைந்துள்ளது அயலான். அதனையடுத்து தீபாவளி ஸ்பெஷலாக அயலான் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகளுக்காக அயலான் ரிலீஸை பொங்கலுக்கு மாற்றியது.
அதன்படி ஜனவரி 12ம் தேதி அயலான் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன. ஆனால், அயலான் படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அதாவது, டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து 24 AM ஸ்டுடியோஸ் ரூ.10 கோடி கடனாக பெற்றிருந்தது. கேஜேஆர் ஸ்டுடியோ அந்த கடனை ஏற்று ரூ.3 கோடி மட்டும் திருப்பி செலுத்தியது. இதனால் டி.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ்க்கு மீதமுள்ள தொகையையும் கொடுக்காமல் அயலான் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என 4 வாரங்களுக்கு தடை விதித்தது நீதிமன்றம்.
இந்நிலையில், அயலான் திரைப்படம் பொங்கலுக்கு கண்டிப்பாக வெளியாகும் என்பதை படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. அயலான் செகண்ட் சிங்கிள் அப்டேட்டுடன் ரிலீஸ் தேதியும் உறுதியாகியுள்ளது. அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது செகண்ட் சிங்கிள் வெளியாகிறது. ஏஆர் ரஹ்மான் இசையில் 'அயலா அயலா' என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்தப் பாடல், வரும் 20ம் தேதி புதன் கிழமை வெளியாகிறது.
இதனை இயக்குநர் ரவிக்குமார், ஏஆர் ரஹ்மான் இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்துள்ளனர். அயலான் செகண்ட் சிங்கிள் குறித்து ட்வீட் போட்டுள்ள ஏஆர் ரஹ்மான், இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்யும் போது வித்தியாசமாக உணர்ந்தேன் என்பதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல் இந்த அப்டேட்டுடன் வெளியான அயலான் போஸ்டரும் செம்மையாக ரீச் ஆகியுள்ளது.
ஏஆர் ரஹ்மான் அருகில் அமர்ந்துள்ள ஏலியன்ஸ், கீ போர்டில் சாங் கம்போஸ் செய்வது போன்று இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது. தனுஷின் கேப்டன் மில்லர், ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படங்களுடன் அயலானும் பொங்கல் ரேஸில் களமிறங்குகிறது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள அயலான் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும் என சினிமா விமர்சகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











