Ayalaan: “சீன் பை சீன் மிரட்டல்.. ஆனாலும் மீண்டும் சிக்கல்...” அயலான் ரிலீஸ் எப்போது..?
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே அவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், விரைவில் அயலான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அயலான் ட்ரெய்லர் ரெடியாகிவிட்டாலும், படம் சொன்னபடி தீபாவளிக்கு வெளியாகுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அயலான் ரிலீஸ் தேதியில் மாற்றமா..? சின்ன திரையில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன், கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார். மெரினா முதல் மாவீரன் வரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷன் செய்தன. சமீபத்தில் வெளியான மாவீரன் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரில் கமல்ஹாசன் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் அயலான் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அயலான் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு, பட்ஜெட் பிரச்சினை போன்றவை காரணமாக கிடப்பில் போடப்பட்டது.
அதன் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஸன் ஜானரில் உருவாகியுள்ள அயலான் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழில் முதல் ஏலியன்ஸ் சயின்ஸ் பிக்ஸன் படமாக அயலான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அயலான் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதனால் இறுதிக்கட்ட கிராபிக்ஸ் பணிகளில் இயக்குநர் ரவிக்குமார் பிஸியாக இருந்தார். சீன் பை சீன் மிரட்டலான மேக்கிங் உடன் உருவாகியுள்ளதாம் அயலான். இது அயலான் ட்ரெய்லர் வெளியாகும் போது ரசிகர்களுக்கு தெரியவரும் என நம்பிக்கையுடன் உள்ளார் சிவகார்த்திகேயன். இந்த சூழலில் திடீரென அயலான் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஏற்கனவே கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தீபாவளி ரேஸில் களமிறங்கவுள்ளது. இப்போது பிரபாஸின் சலார் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர மேலும் சில படங்களும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அயலான் ரிலீஸ் தேதி கிறிஸ்துமஸ் அல்லது பொங்கலுக்கு மாற்றப்படலாம் என சொல்லப்பட்டது. இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகவில்லை என்றாலும், அயலான் ரிலீஸ் தேதி மாற்றம் என தகவல்கள் வைரலாகி வருகின்றன.
அதேநேரம், அயலான் படத்தின் ட்ரெய்லர் எடிட்டிங் முடிந்துவிட்டதாகவும், விரைவில் அதன் ரிலீஸ் குறித்து அபிஸியல் அப்டேட் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. அதில், அயலான் படத்தின் ரிலீஸ் தேதியும் கன்ஃபார்ம் செய்யப்பட்டுவிடும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், இந்தியாவின் பெஸ்ட் சயின்ஸ் பிக்ஸன் படமாக அயலான் இருக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











