மீண்டும் இணையும் அயலான் கூட்டணி... சிவகார்த்திகேயன் ஸ்கெட்ச்சில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம்?
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை.
அயலான் ரிலீஸ் தேதிக்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தரமான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

திரையுலகில் 11 ஆண்டுகள்
சின்ன திரை கேம் ஷோக்களில் ரொம்பவே பிரபலமாக இருந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கிய மெரினா படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தனுஷுடன் 3, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர் நீச்சல், ரஜினி முருகன், ரெமோ, டாக்டர், டான், பிரின்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். திரையுலகில் அடியெடுத்து வைத்து 11 ஆண்டுகள் ஆனதை சில தினங்களுக்கு முன்னர் மாவீரன் படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் சிவகார்த்திகேயன்.

அயலான் ரிலீஸ் அப்டேட்
மாவீரனை தொடர்ந்து கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்காக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், ஏ.ஆர். முருகதஸ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஏற்கனவே நடித்து முடித்து கிடப்பில் கிடக்கும் அயலான் படத்தையும் வெளியிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளார். 2015ல் வெளியான 'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவிக்குமார். இந்தப் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் 'அயலான்' படத்தை இயக்கினார்.

இறுதிக்கட்டத்தில் அயலான்
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் என பலரும் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 2018ல் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் 3 பாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பட்ஜெட் பிரச்சினை காரணமாக பல மாதங்களாக கிடப்பில் இருந்த அயலான் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே விரைவில் அயலான் ரிலீஸ் தேதியை படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் அயலான் கூட்டணி
அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸாக நடித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அயலானுக்காக கிட்டத்தட்ட 5 வருடங்கள் வேறு எந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் உள்ளார் இயக்குநர் ரவிகுமார். அதனால் அயலான் வெளியானதும் உடனடியாக ரவிகுமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் இந்தப் படம் பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் எனவும் சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











