Ayalaan Teaser: லியோ ட்ரெய்லருக்குப் போட்டியாக அயலான் டீசர்... சிவகார்த்திகேயனின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!
சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் தேதி தீபாவளியில் இருந்து பொங்கலுக்கு மாற்றப்பட்டது.
ரவிக்குமார் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் அயலான், சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.

அயலான் கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் பல தடைகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டதால், அயலான் டீசரை தற்போது வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.
சிவகார்த்திகேயனின் அயலான் டீசர் ரெடி
கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது அவரது 21வது படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். SK 21 என டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படம், அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய அயலான் படப்பிடிப்பு, கொரோனா ஊரடங்கு, பட்ஜெட் பிரச்சினை போன்றவை காரணமாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் மீண்டும் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு முடிவுக்கு வந்தது. ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இந்தியாவின் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக அயலான் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அயலான் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. ஆனால், கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியவில்லை என்பதால், அயலான் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. மேலும், இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அயலான் தீபாவளிக்கு வெளியாகும் என காத்திருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த அப்டேட் ஏமாற்றமாக அமைந்தது. இதனையடுத்து அவர்களை கூல் செய்வதற்காக அயலான் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே அயலான் ரிலீஸ் தேதி அப்டேட்டில், சில நொடி க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. அதற்கே கூஸ்பம்ஸ் ஆன ரசிகர்கள், இப்போது டீசரை ஆவலோடு எதிர்பார்த்துள்ளன்ர்.
அதன்படி, அயலான் டீசர் அக்டோபர் 2ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நாளில் விஜய்யின் லியோ ட்ரெய்லரும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 2ம் தேதி இல்லையென்றால், அக்டோபர் 7 அல்லது 8ம் தேதி அயலான் டீசர் வெளியாகும் என சொல்லப்படுகிறது. டீசருக்கு கிடைக்கும் வரவேற்பைப் பெறுத்து அடுத்தடுத்து சில அப்டேட்களை வெளியிட அயலான் படக்குழு முடிவு செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











