Ayalaan Teaser: அயலான் டீசருக்கு நாள் குறித்த சிவகார்த்திகேயன்... மிரண்டு போய் நிற்கும் கோலிவுட்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
அயலான் ரிலீஸ் தேதி அறிவிப்புடன் ரகளையான மினி டீசரையும் படக்குழு வெளியிட்டிருந்தது.
அதேபோல், அயலான் படத்திற்கு முன்பாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் ஜூலை 14ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில், அயலான் படத்தின் டீசர் ரிலீஸ் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அயலான் டீசர் அப்டேட்: டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கடந்தாண்டு டான், பிரின்ஸ் படங்களில் ஹீரோவாக மாஸ் காட்டியவர், இந்தாண்டு மாவீரன், அயலான் படங்கள் மூலம் தெறிக்கவிட காத்திருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா ஆகியோர் நடித்துள்ள மாவீரன் ஜூலை 14ம் தேதி வெளியாகிறது.
முன்னதாக இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக மாவீரன் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் மாற்றியுள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் 5 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகவுள்ளது. 2017ல் தொடங்கப்பட்ட இந்தப் படம் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே ட்ராப் ஆனது. 24AM பேனரில் தொடங்கப்பட்ட அயலான் படத்தை தற்போது KJR ஸ்டூடியோஸ் தயாரித்து முடித்துள்ளது.

இதனையடுத்து அயலான் ரிலீஸ் தேதியை திடீரென அறிவித்து சர்ப்ரைஸ் கொடுத்தது படக்குழு. அதன்படி, இந்தப் படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்புடன் மினி டீசரையும் படக்குழு வெளியிட்டது. இந்த மினி டீசரிலேயே மிரண்டுபோன ரசிகர்கள் டீசர், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்திருந்தனர். அதற்கும் தற்போது நாள் குறித்துவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
அதன்படி அயலான் டீசர் மாவீரன் படத்தோடு சேர்ந்து வெளியாகப் போகிறதாம். அதாவது ஜூலை 14ம் தேதி மாவீரன் திரைப்படம் வெளியாகும் தியேட்டரில் அயலான் டீசரை ரிலீஸ் செய்யவுள்ளார்களாம். இதனால் ஒரேகல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த டீசர் படு மிரட்டலாகவும் ஹைடெக் தொழில்நுட்பத்துடனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அயலான் தான் முதல் ஏலியன் திரைப்படமாக உருவாகியுள்ளது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். முக்கியமாக 4500 VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்ஷன் திரைப்படமாக அயலான் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அயலான் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறி வருகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











