Ayalaan Teaser: ஏலியன்ஸுடன் மஜா செய்த சிவகார்த்திகேயன்... அயலான் டீசர் வைப் லோடிங்!!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் தீபாவளி ரிலீஸில் இருந்து பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டது.

ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அயலான் படத்தின் டீசர் நாளை மறுநாள் (அக்.6) வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் ஏலியன்ஸுடன் மஜா செய்த போஸ்டரை அயலான் டீம் வெளியிட்டுள்ளது.

 Ayalaan Teaser: Sivakarthikeyans Ayalaan teaser poster trending on now

ஏலியன்ஸுடன் மஜா செய்த சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருந்த அயலான் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் முடியாததால், அடுத்தாண்டு பொங்கலுக்கு அயலான் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் வேலைகள் அயலானில் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்காகவே அயலான் ரிலீஸ் தேதியை பொங்கலுக்கு மாற்றியுள்ளது படக்குழு. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் என இயக்குநர் ரவிக்குமார் உறுதியாகக் கூறியுள்ளார். இதன் காரணமாக அயலான் மீதான எதிர்பார்ப்பு இன்னும் எகிறிப் போயுள்ளது.

இந்நிலையில், அயலான் ரிலீஸ் தள்ளிப் போனதால், ரசிகர்களுக்காக டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 6ம் தேதி அயலான் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. ஏஆர் ரஹ்மான், சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் மூவரும் ஏலியன்ஸுடன் அமர்ந்து அயலான் டீசரை எடிட் செய்யும் போஸ்டருடன் அப்டேட் வெளியாகியிருந்தது.

இதன் தொடர்ச்சியாக அயலான் டீசருக்காக இன்றும் ஒரு ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரையரங்கில் சிவகார்த்திகேயன் ஏலியன்ஸும் பாப்கார்ன் சாப்பிட்டபடி படம் பார்ப்பதைப் போல அந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. அயலான் சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகியிருந்தாலும் படம் செம்ம ஜாலியாக இருக்குமோ என இந்த போஸ்டர் எதிர்பார்க்க வைத்துள்ளது. அதேநேரம் அயலான் போஸ்டர் சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.

KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் படத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் அயலான் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்திய சினிமாவில் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக அயலான் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X