Ayalaan Teaser: அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்... ஏலியன்ஸுடன் சிவகார்த்திகேயன் கொடுத்த அப்டேட்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் தீபாவளி ரிலீஸில் இருந்து பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள அயலானுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

Ayalaan Teaser: Sivakarthikeyans Ayalaan teaser will be released on Oct 6th

ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததால், அயலான் டீசரை வெளியிட படக்குழு தற்போது முடிவு செய்துள்ளது.

அதன்படி, அயலான் டீசர் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன், ஏஆர் ரஹ்மான், இயக்குநர் ரவிக்குமார் மூவரும் ஏலியன்ஸுடன் சேர்ந்து வெளியிட்டுள்ளனர்.

அயலான் டீசர் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் கடந்த 5 ஆண்டுகளாக ரிலீஸாகாமல் கிடப்பில் இருந்தது. பைனான்ஸ் பிரச்சினையால் ட்ராப் ஆகவிருந்த அயலான், தற்போது KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் முழுமையடைந்துள்ளது. சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார். ஏஆர் ரஹ்மான் அயலான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Ayalaan Teaser: Sivakarthikeyans Ayalaan teaser will be released on Oct 6th

அயலான் ஷூட்டிங் கடந்தாண்டு முடிவுக்கு வந்ததை அடுத்து, கிராபிக்ஸ் பணிகளுடன் போஸ்ட் புரொடக்‌ஷனும் வேகமாக நடைபெற்று வருகிறது. ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் உருவாகும் அயலான், ரசிகர்களுக்கு ரொம்பவே புதுமையான அனுபவத்தை கொடுக்கும் என சொல்லப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் கிராபிக்ஸில் கடுமையான உழைப்பை போட்டு வருகிறது படக்குழு.

இந்திய சினிமாவில் முதல் ஏலியன்ஸ் திரைப்படமாக அயலான் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில், அயலான் படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், இன்னும் கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் அயலான் தீபாவளி ரிலீஸில் இருந்து பின்வாங்கியது. அதன்படி அயலான் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழு அபிஸியலாக அறிவித்தது.

Ayalaan Teaser: Sivakarthikeyans Ayalaan teaser will be released on Oct 6th

இதனையடுத்து ரசிகர்களை கூல் செய்வதற்காக அயலான் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, அயலான் டீசர் அக்டோபர் 6ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. KJR ஸ்டூடியோஸ் டிவிட்டர் பக்கத்தில் வெளியான இந்த அப்டேட்டில், அயலான் ஸ்பெஷல் போஸ்டரும் இடம்பெற்றுள்ளது. அதில், அயலான் டீசருக்கு ஏஆர் ரஹ்மான் மியூசிக் கம்போஸ் பண்ண, அவருக்கு அருகில் சிவகார்த்திகேயனும் இயக்குநர் ரவிக்குமாரும் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

முக்கியமாக இந்த போட்டோவில் ஏஆர் ரஹ்மான் பக்கத்தில் ஏலியன்ஸ் பொம்மையும் இருப்பது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. அயலான் டீசருக்கு எங்களது ஏலியன்ஸ் அப்ரூவ் கொடுத்துவிட்டது என இந்த போஸ்டரில் கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அயலான் டீசர் ரிலீஸ் தேதி அப்டேட்டால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X