Ayalaan: அயலான் ரிலீஸ் பஞ்சாயத்து ஓவர்... கேப்டன் மில்லரை ஓரங்கட்ட செம்ம மாஸ்டர் பிளான்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் 12ம் தேதி ரிலீஸாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது அந்த பஞ்சாயத்து முடிந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், அயலானை ப்ரொமோஷன் செய்ய சிவகார்த்திகேயன் மாஸ்டர் பிளானுடன் களமிறங்கியுள்ளாராம்.

அயலான் ரிலீஸ் பஞ்சாயத்து ஓவர்: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் 5 ஆண்டுகள் இடைவேளைக்குப் பின்னர் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. 2018ல் தொடங்கப்பட்ட அயலான் பல தடைகள் காரணமாக ட்ராப் ஆகும் நிலைக்குச் சென்றது. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அயலான் படத்தை விட்டுவிடாமல் சிவகார்த்திகேயனும் ரவிக்குமாரும் பார்த்துக்கொண்டனர். அதற்கு பலனாக அயலான் வரும் 12ம் தேதி ரிலீஸாகிறது.

 Ayalaan: Udhayanidhi Stalin has plans to watch the Ayalaan movie

பொங்கல் ரேஸில் களமிறங்கும் அயலானுக்குப் போட்டியாக தனுஷின் கேப்டன் மில்லர் படமும் ரிலீஸாகிறது. இதனால் தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையேயான போட்டியாக இது பார்க்கப்படுகிறது. அயலான் ட்ரெய்லரை தொடர்ந்து கேப்டன் மில்லர் ட்ரெய்லரும் மறு நாளே வெளியானது. ஆனால், கேப்டன் மில்லருக்கு சென்சாரில் UA சர்டிபிகேட் கிடைத்துள்ளது. அதேநேரம் அயலான் படத்துக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளதால் ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே அயலான் படத்தின் ரிலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. அயலான் படத்தை தயாரித்த 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடம் 10 கோடி ரூபாயை கடனாக பெற்றிருந்தது. இந்த தொகையை ஏற்றுக்கொண்ட கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் 3 கோடி ரூபாயை மட்டுமே திருப்பி செலுத்தியது. மீதித் தொகையை திருப்பிக் கொடுக்காததால் அயலான் ரிலீஸுக்கு சென்னை நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், இந்த பிரச்சினைகள் இன்றோடு முடிவுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு இன்று பணம் செட்டில் செய்யப்படவிருப்பதால் அயலான் ரிலீஸில் பிரச்சினை இல்லை என சொல்லப்படுகிறது. இதனையடுத்து படத்தை ப்ரொமோஷன் செய்வதற்காக ஸ்பெஷல் ஷோ ஒன்றை திரையிட சிவகார்த்திகேயன் முடிவு செய்துள்ளாராம். இதில் உதயநிதியும் கலந்துகொண்டு அயலான் படத்தை பார்க்கவுள்ளாராம்.

அவருடன் மேலும் பல சினிமா நட்சத்திரங்கள் அயலான் படத்தை பார்க்கவுள்ளனர். அவர்களது பாசிட்டிவான விமர்சனங்களை அயலான் படத்தின் ப்ரொமோஷனில் பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால் இந்த பொங்கல் ரேஸில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் இரண்டில் எது வெற்றி பெறும் என்பதே பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

தனுஷின் கேப்டன் மில்லர் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் ரன்னிங் டைம், 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X