அந்த கனவு நனவாகிடுச்சு.. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயனின் “வேற லெவல் சகோ” ரிலீஸ்!
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நடிக்க வேண்டும் என்கிற நீண்ட நாள் கனவு சிவகார்த்திகேயனுக்கு நிறைவேறி உள்ளது.
Recommended Video
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது அயலான் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடிய வேற லெவல் சகோ பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஸ்டாண்ட் அப் காமெடியன், தொகுப்பாளர், காமெடி நடிகர், லோ பட்ஜெட் பட ஹீரோ என படிப்படியாக வாழ்க்கையை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன், இன்று கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

அயலான்
24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் மிக நீண்ட நாட்களாக உருவாகி வரும் ஏலியன் படம் தான் அயலான். பட்ஜெட் காரணமாக கிடப்பில் கிடந்த அந்த படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
Lyrics penned by Lyricist_Vivek ✍️#HBDPrinceSivaKarthikeyan Siva_Kartikeyan Ravikumar_Dir Rakulpreet #Niravshah AntonyLRuben kjr_studios SonyMusicSouth — 24AM STUDIOS (24AMSTUDIOS) February 17, 2021 '>
வாழ்நாள் கனவு
தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா இந்த படத்திற்காக ஏ.ஆர். ரஹ்மான் சாரை ஒப்பந்தம் செய்த நிலையிலேயே, தனது வாழ்நாள் கனவு நிறைவேறியதாக சிவகார்த்திகேயன் அப்பவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்நிலையில், அயலான் படத்தில் இருந்து வேற லெவல் சகோ பாடல் இன்று வெளியாகி உள்ளது.

இசைப்புயல் குரலில்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து, சிவகார்த்திகேயனுக்காக பாடியுள்ள வேற லெவல் சகோ பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. சயின்ஸ் ஃபிக்ஷன், ஏலியன் சம்பந்தப்பட்ட படமாக இந்த படம் உருவாகி வருவதால், பின்னணி இசையிலும் ரஹ்மான் வேற லெவலில் மிரட்டி இருப்பார் என தெரிகிறது.

ரசிகர்களுக்கு வருத்தம்
ஆனால், இந்த படத்தின் ஆடியோ மட்டுமே வெளியாகி உள்ளது. லிரிக் வீடியோ வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அது கொஞ்சம் வருத்தமாகவே அமைந்துள்ளது என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகள் குவிகின்றன. கூடிய சீக்கிரம் வெளியாக உள்ள இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு நிச்சயம் பெரிய திரை விருந்தே கொடுக்கும் என்பது கன்ஃபார்ம்.


Click it and Unblock the Notifications











