Ayalaan VS Captain Miller: பரபரக்க வைத்த பொங்கல் ரேஸ்... கேப்டன் மில்லரை வீழ்த்தி அயலான் சாதனை!
சென்னை: 2024 பொங்கலை முன்னிட்டு கேப்டன் மில்லர், அயலான் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால், தனுஷ், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இடையே அதிக ஹைப் ஏற்பட்டது. கண்டிப்பாக தனுஷின் கேப்டன் மில்லர் பொங்கல் ரேஸில் வின்னராகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், 10 நாட்கள் முடிவில் அயலான் பக்கத்தில் நெருங்க முடியாமல் போராடி வருகிறது கேப்டன் மில்லர்.
கேப்டன் மில்லரை வீழ்த்திய அயலான்: தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன், விஜய் சேதுபதி நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் ஆகிய படங்கள் இந்தாண்டு பொங்கல் ரேஸில் களமிறங்கின. இதில் அயலான், கேப்டன் மில்லர் இடையே கடும் போட்டி காணப்பட்டது. நண்பர்களாக இருந்து பிரிந்த தனுஷும் சிவகார்த்திகேயனும், பாக்ஸ் ஆபிஸில் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர்.

கேப்டன் மில்லர் திரைப்படம் முதலில் டிசம்பர் 15ம் தேதி ரிலீஸாகவிருந்தது. ஆனால், அதன்பின்னர் தான் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது. சிவகார்த்திகேயனின் அயலானுக்குப் போட்டியாக தான் கேப்டன் மில்லர் படத்தை பொங்கலுக்கு ரிலீஸானதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபட்டன. இதனால் இந்த இரண்டு படங்களுக்கும் மிகப் பெரிய அளவில் ப்ரொமோஷன்கள் செய்யப்பட்டன.
அதன்படி, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லரும், சிவகார்த்திகேயன் - ரவிக்குமார் கூட்டணியில் அயலானும் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 12ம் தேதி வெளியானது. எதிர்பார்த்ததை போலவே முதல் இரண்டு நாட்களில் கேப்டன் மில்லர் படத்துக்கு தரமான ஓபனிங் கிடைத்தது. ஆனால், கதை, திரைக்கதையில் சொதப்பல், அதிகமான வன்முறை காட்சிகள் என கேப்டன் மில்லர் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன.
அதேநேரம், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஃபேமிலி ஆடியன்ஸிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் இரண்டு நாட்களில் கேப்டன் மில்லரை விட பின் தங்கியிருந்த அயலானின் வசூல், அடுத்தடுத்த நாட்களில் பாக்ஸ் ஆபிஸை அசரடித்தது. இதனால் 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியன்ஸை பின்னணியாக வைத்து உருவான அயலான், கிராபிக்ஸ் காட்சிகளில் மிரட்டியிருந்தது.
இந்நிலையில், அயலான், கேப்டன் மில்லர் படங்கள் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டன. பொங்கல் விடுமுறை முடிந்ததுமே அயலான் படத்துக்கு அதிகமான ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டன. இதனால் தொடர்ந்து வசூலில் ஆதிக்கம் செலுத்தும் அயலான், ஞாயிற்றுக் கிழமையான நேற்று 2.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக அயலான் இதுவரை 67 முதல் 70 கோடிக்கு அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாம்.
ஆனால், கேப்டன் மில்லர் படத்தின் நேற்றைய வசூல் 1 கோடி ரூபாய் மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் மொத்தம் 10 நாட்களுக்கான வசூல் 50 கோடி ரூபாய் இருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் யாருமே எதிர்பாராத வகையில் கேப்டன் மில்லரை விட அயலான் இந்தாண்டு பொங்கல் ரேஸில் மாஸ் காட்டியுள்ளதாக கோலிவுட் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் விமர்சன ரீதியாக அருண் விஜய்யின் மிஷன், விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் படங்கள் கவனம் ஈர்த்துள்ளன.


Click it and Unblock the Notifications











