Ayalaan VS Captain Miller: அயலான் VS கேப்டன் மில்லர்... பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் வின்னர் யார்..?
சென்னை: கடந்தாண்டு விஜய் - அஜித் இருவரின் படங்களும் பொங்கல் ரேஸில் களமிறங்கின. அதேபோல், இந்தாண்டு தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படங்கள் ரிலீஸாகியுள்ளன. நேற்று வெளியான இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர், அயலான் படங்களில் யார் இந்தாண்டு பாக்ஸ் ஆபிஸ் வின்னர் என்பதை பார்க்கலாம்.
கேப்டன் மில்லர் VS அயலான் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்: சின்ன திரையில் இருந்து சினிமாவில் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு ஆரம்பத்தில் கை கொடுத்தவர் தனுஷ். தனது 3 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வாய்ப்புக் கொடுத்த தனுஷ், பின்னர் அவரது சொந்த தயாரிப்பில் ஹீரோவாக நடிக்கவும் சான்ஸ் கொடுத்தார். ஆனாலும், திடீரென இருவரும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் படமும், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படமும் இந்தாண்டு பொங்கல் ரேஸில் களமிறங்கின.

முன்னதாக தனுஷின் கேப்டன் மில்லர் டிசம்பர் 15ம் தேதி ரிலீஸாகவிருந்தது. அதேபோல், சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினி கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படங்கள் தான் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கேப்டன் மில்லர் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்ற அறிவிப்பு வெளியானதும், லால் சலாம் பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தாண்டு பொங்கலுக்கு தனுஷ் VS சிவகார்த்திகேயன் இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ளனர்.
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். பீரியட் ஜானரில் அனல் தெறிக்கும் ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ள கேப்டன் மில்லருக்கு முதல் நாளில் செம்ம மாஸ் ஓபனிங் கிடைத்துள்ளது. தனுஷின் அசுரத்தனமான நடிப்பு, மேக்கிங், ஜிவி பிரகாஷின் பிஜிஎம் இந்த மூன்றும் தான் கேப்டன் மில்லர் படத்தின் சக்சஸ்க்கு காரணம் என சொல்லப்படுகிறது. அதேநேரம் படத்தில் சில குறைகள் இருப்பதாகவும் நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர்.
சிவகார்த்திகேயனின் அயலான், கேப்டன் மில்லருக்கு அப்படியே நேர் எதிராக ஃபேமிலி ஆடியன்ஸ் கொண்டாடும் படமாக உருவாகியுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் வெளியான அயலான் படத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இயக்குநர் ரவிக்குமாருக்கு இந்தப் படம் மிகப் பெரிய அளவில் ரீச் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இந்தப் படம் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அயலான், கேப்டன் மில்லர் இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பெரிய வித்தியாசம் உள்ளது. அதாவது தனுஷின் கேப்டன் மில்லர் முதல் நாளில் 8 முதல் 10 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சிவகார்த்திகேயனின் அயலான் முதல் நாளில் 4 முதல் 5 கோடி வரை மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாம்.
அதனடிப்படையில் தற்போதைக்கு கேப்டன் மில்லர் தான் நம்பர் 1 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வரும் நாட்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்பது விரைவில் தெரியவரும். இன்னொரு பக்கம் டோலிவுட்டில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான குண்டூர் காரம், முதல் நாளில் 45 கோடி வரை வசூல் செய்து மாஸ் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











