Ayalaan VS Captain Miller: அயலான் VS கேப்டன் மில்லர்... ஒரு வாரம் முடிவில் பொங்கல் வின்னர் யார்?
சென்னை: இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக அயலான், கேப்டன் மில்லர், மெர்ரி கிறிஸ்துமஸ், மிஸன் திரைப்படங்கள் வெளியாகின. இதில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் படங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், முதல் வாரம் முடிவில் அயலான், கேப்டன் மில்லர் படங்களில் பாக்ஸ் ஆபிஸ் அடிப்படையில் எது வெற்றிப் பெற்றது என்பதை இப்போது பார்க்கலாம்.
அயலான் VS கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ்
2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அயலான், கேப்டன் மில்லர் படங்கள் நேருக்கு நேர் மோதின. ரசிகர்களை பொறுத்தவரை இது தனுஷ் - சிவகார்த்திகேயன் இடையேயான மோதலாகவே பார்க்கப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்களாக வலம் வந்த இருவருமே, இப்போது ஒரேநாளில் தங்களது படங்களை ரிலீஸ் செய்து கெத்து காட்டினர். இதனால் கோலிவுட்டிலும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த வாரம் 12ம் தேதி கேப்டன் மில்லர், அயலான் ஆகியவற்றுடன் மிஸன், மெர்ரி கிறிஸ்துமஸ் படங்களும் வெளியாகின. மிஸன் அருண் விஜய் நடிப்பிலும், மெர்ரி கிறிஸ்துமஸ் விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் நடிப்பிலும் வெளியானது. இதில் விஜய் சேதுபதி நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் இந்தித் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பாக்ஸ் ஆபிஸில் அயலான் VS கேப்டன் மில்லர் படங்கள் தான் நேருக்கு நேர் மோதின.
அதன்படி, முதல் நாளில் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு மட்டுமே நல்ல ஓபனிங் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் அயலான் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வசூல் செய்யவில்லை. ஆனால், முதல் நாள் முடிவில் எல்லாமே தலை கீழானது. கேப்டன் மில்லர் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தது. அதேநேரம் அயலானுக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகளவில் குவிந்தனர்.
இதனால் இரண்டாவது நாளில் இருந்தே கேப்டன் மில்லர் வசூல் குறைய தொடங்கியது. அயலான் கலெக்ஷன் மெல்ல மெல்ல உயர்ந்தது. அதேபோல் அயலான் 4 நாட்கள் முடிவில் 50 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழுவும் அறிவித்தது. ஆனால், கேப்டன் மில்லர் கலெக்ஷன் பற்றி இதுவரை படக்குழு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதனடிப்படையில் ஒரு வாரம் முடிவில் தனுஷின் கேப்டன் மில்லர் 40 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான், இதுவரை 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்ஷன் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், முதல் வாரம் வரையிலான பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களின் தகவலின்படி சிவகார்த்திகேயனின் அயலான் தான் பொங்கல் வின்னர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











