கமலுடன் இணைகிறாரா அயலான் இயக்குநர்.. வாழ்வின் பரவசம்னு அவர் சொல்லியிருக்கறத பாருங்க!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் ரசிகர்களை மிகுந்த பரவசத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

அவர்களும் படம் தந்துள்ள த்ரில் அனுபவத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

வெற்றிகரமான 16 நாட்களை கடந்து வாரயிறுதி நாளான இன்றும் வெற்றிநடை போட்டு வருகிறது.

விக்ரம் படம்

விக்ரம் படம்

நடிகர் கமல்ஹாசன் 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விக்ரம் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இந்தப் படத்தின்மூலம் மீண்டும் தன்னுடைய என்ட்ரியை கோலிவுட்டில் சிறப்பாக பதிவிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தொடர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் வலிமையாக உள்ளது.

அடுத்தடுத்தப் படங்கள்

அடுத்தடுத்தப் படங்கள்

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார் கமல். விக்ரம் 3 படத்திற்கு முன்னதாக வேறொரு படத்தில் நடிக்கவுள்ளார். இடையில் தன்னுடைய அரசியல், பிக்பாஸ் உள்ளிட்டவற்றிலும் அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் சார்பில் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கூட்டணியில் ஒரு படத்தையும் தயாரிக்க உள்ளார்.

விஜய், சூர்யாவுடன் படங்கள்

விஜய், சூர்யாவுடன் படங்கள்

இவ்வாறு அடுத்தடுத்து தன்னுடைய திட்டங்களை சிறப்பான செயல்படுத்தவுள்ளார் கமல்ஹாசன். அடுத்ததாக விஜய்யுடனும் இணைந்து ஒரு படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அதற்கு அவருடைய டேட்ஸ் கிடைக்க வேண்டும் என்றும் அவர் முன்னதாக ஒரு பிரமோஷனின்போது தெரிவித்திருந்தார். சூர்யாவை வைத்து விக்ரம் 3 படத்தையும் அவர் தயாரிக்க உள்ளார்.

விக்ரம் சக்சஸ் மீட்

விக்ரம் சக்சஸ் மீட்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் விரைவில் தளபதி 67 படத்தை முடித்துவிட்டு விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்றும் அவர் விக்ரம் சக்சஸ் மீட்டில் கேட்டுக் கொண்டார். மேலும் லோகேஷின் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க தான் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும் அது தன்னுடைய படம் போன்றது என்றும் கூறியிருந்தார்.

இயக்குநர் ரவிக்குமார் -கமல் சந்திப்பு

இயக்குநர் ரவிக்குமார் -கமல் சந்திப்பு

இந்நிலையில் இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களின் இயக்குநர் ரவிக்குமார் ஆர், கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார். அவரை லோகேஷ் கனகராஜ் கமலுக்கு அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள ரவிக்குமார், தான் வியந்து பார்த்த ஆளுமை என்று கமல் குறித்து அவர் கூறியுள்ளார்.

கமல் குறித்து வியப்பு

கமல் குறித்து வியப்பு

மேலும் இந்த சந்திப்பில் கமலுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ள ரவிக்குமார் அவருடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். இதனிடையே டைம் ட்ராவல் குறித்து ஸ்பானிஷ் படம் குறித்தும் கமல் இந்த சந்திப்பின்போது ரவிக்குமாரிடம் கமல் பேசியுள்ளது குறித்தும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரசிக்குமாரின் இன்று நேற்று நாளை படம் டைம் டிராவல் குறித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்வின் பரவசம்

வாழ்வின் பரவசம்

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வியப்பு தெரிவித்த ரவிக்குமார் வாழ்வின் பரவசம் என்றும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பு பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளார். கமல் அடுத்தடுத்த படங்களை அறிவித்துவரும் சூழலில், ரவிக்குமாரும் அவரது தயாரிப்பில் இணைவாரா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

விரைவில் ரிலீசாகும் அயலான்

விரைவில் ரிலீசாகும் அயலான்

தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை எடுத்து முடித்துள்ளார் ரவிக்குமார். இந்தப் படத்தின் சிஜி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகவுள்ளன. படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக சிவகார்த்தியின் பிரின்ஸ், அயலான் படங்கள் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X