அயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரிமேக் செய்த இளைஞர்கள்.. பிரமித்து போன சூர்யா.. ஆடியோ மூலம் நன்றி!

சென்னை: அயன் பட பாடல் காட்சிகளை தத்ரூபமாக ரீமேக் செய்துள்ள இளைஞர்களுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Suriya Appreciates Kerala Boys For AYAN Song Recreation | KV Anand

கடந்த 2009ஆம் ஆண்டு கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான படம் அயன். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா, தமன்னா, பிரபு, பொன்வண்ணன், ஜெகன், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே செம ஹிட்டானது.

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு

ஸ்மக்லிங் செய்யும் இளைஞராக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகர் சூர்யா. நடனத்திலும் பட்டையை கிளப்பியிருப்பார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சூர்யா போல் காஸ்ட்யூம்

சூர்யா போல் காஸ்ட்யூம்

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற பளபளக்குற பகலா நீ பாடலை இளைஞர்கள் சிலர் ரீகிரியேஷன் செய்துள்ளனர். அந்த பாடலில் சூர்யா அணிந்திருக்கும் காஸ்ட்யூம்களை அணிந்து அவரை போலவே நடனமாடி அசத்தியுள்ளனர்.

ஆடிய மூலம் வாழ்த்து

ஆடிய மூலம் வாழ்த்து

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நடிகர் சூர்யா, பிரமித்து போயுள்ளார். மேலும் அந்த இளைஞர்களை ஆடியோ மூலம் வாழ்த்தி நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

லிட்டில் பிரதர்ஸ்..

லிட்டில் பிரதர்ஸ்..

அவர் தெரிவித்திருப்பதாவது, திருவனந்தபுரம் ராஜாஜி நகரில் இருக்கும் அனைத்து இளைய சகோதரர்களுக்கும் இந்த செய்தி. வணக்கம் நான் சூர்யா பேசுகிறேன். என்ன ஒரு அற்புதமான பணியை நீங்கள் அனைவரும் செய்திருக்கிறீர்கள். முழுவதும் ரசித்தேன். 'அயன்' படம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதை இவ்வளவு உயிர்ப்புடன் மீண்டும் உருவாக்கியதற்கு முதலில் பெரிய நன்றி.

எதையும் சாதிக்க முடியும்

எதையும் சாதிக்க முடியும்

'அயன்' டீமிலிருந்து அனைவருமே இதைப் பார்த்து ரசித்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தக் வீடியோவை பார்த்திருந்தால் கே.வி.ஆனந்த் அவர்களும் அதிகம் சந்தோஷப்பட்டிருப்பார். எந்தவிதமான தொழில்நுட்பக் கருவிகள் இல்லாமல் இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். உங்களின் பேரார்வம் இருந்தால், பேரன்பு இருந்தால் வாழ்க்கையில் எதையுமே சாதிக்க முடியும், எதுவும் நம்மைத் தடுக்காது என்கிற செய்தியை நீங்கள் பலருக்குக் கொண்டு சேர்த்திருக்கிறீர்கள்.

உற்சாகத்தை பார்த்து ரசித்தேன்

உற்சாகத்தை பார்த்து ரசித்தேன்

உங்கள் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் எதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எந்த சாக்கும் சொல்ல வேண்டாம் என்கிற கருத்தையும் நீங்கள் சொல்வதைப் பார்க்க முடிகிறது. முழு காணொலியில் உங்கள் உற்சாகத்தைப் பார்த்து ரசித்தேன். மீண்டும் பழைய நினைவுகளை அசைபோடுவது நன்றாக இருந்தது.

பாதுகாப்பாக இருங்கள்

பாதுகாப்பாக இருங்கள்

உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். இதன் பின்னால் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு. உங்கள் குடும்பம், நண்பர்கள், அக்கம் பக்கத்தினர் என ஆதரவளித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவியுங்கள். நீங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் கண்டிப்பாகச் சிறந்து விளங்குவீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்." இவ்வாறு நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

கேவி ஆனந்த் இல்லை

கேவி ஆனந்த் இல்லை

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பலரும், உங்களின் இந்த திறமையை பார்த்து பாராட்ட இயக்குநர் கேவி ஆனந்த் தற்போது உயிருடன் இல்லை என்பது பெரிய வருத்தம் என்று பதிவிட்டுள்ளனர். இப்படத்தின் இயக்குநரான கேவி ஆனந்த் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X