விதியை மீறிய ஆயிஷா,ஷெரினா.. இவங்க செய்றது தப்பு..வலுக்கும் கண்டனம்!

சென்னை : பிக் பாஸ் வீட்டின் விதியை மீறி நடந்து கொண்ட ஷெரின் மற்றும் ஆயிஷாவுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

இந்த சீசனில் அமுதவாணன், அசல் கோளாறு, ஆயிஷா, அஜீம், தனலக்ஷ்மி, தினேஷ், ஜனனி, கதிரவன், மகேஸ்வரி, மணிகண்டன், நந்தினி, நிவாஷினி, குயின்ஸி, ரச்சித்தா, ராம், ராபர்ட், ஷெரினா, ஷிவின், விக்ரமன், சாந்தி, ஜி.பி. முத்து என 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஜி.பி. முத்து, சாந்தி ஆகிய 2 பேரும் வெளியேறி உள்ளதால் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர்.

மயங்கி விழுந்த ஆயிஷா

மயங்கி விழுந்த ஆயிஷா

தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஆயிஷாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் மயங்கி விழுந்தார். அவரை அசீம் தூக்கிக் கொண்டு சென்று மருத்துவ உதவி அளித்தார். இதையடுத்து, இரவு முழுவதும் ஓய்வு எடுத்த ஆயிஷா காலையில் வீட்டிற்குள் வந்தார் அவரை அனைவரும் கட்டித்தழுவி வரவேற்றனர்.

நீயும் பொம்மை...நானும் பொம்மை

நீயும் பொம்மை...நானும் பொம்மை

இதையடுத்து, நேற்று நீயும் பொம்மை...நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்றது. இதில், ஆயிஷாவால் சரியாக விளையாட முடிவில்லை என்றாலும் தன்னால் முடிந்த வரை விளையாடினார். ரச்சிதா, ஷிவின், ஜனனி, அமுதவாணன், தனலட்சுமி குரூப் சேர்த்து கொண்டு மற்ற போட்டியாளர்களின் பொம்மையை எடுக்காமல் விளையாடியது மற்றவர்களுக்கு கடுப்பாக இருந்தது.

ஜனனி வெளியேறினார்

ஜனனி வெளியேறினார்

இதனால் , ஷெரீன், ஜனனி என்று எழுதப்பட்டிருந்த பொம்மையை எடுத்துவைத்துக் கொண்டு, இந்த பொம்மையை நான் உள்ளே வைக்கமாட்டேன் நாமினேட் செய்யப்போகிறேன் என்றார். இதனால், ஜனனி விளையாட்டிலிருந்து வெளியேறினார். அதே போல ரச்சித்தாவும் ஆயிஷாவின் பொம்மையை எடுத்துவைத்துக்கொண்டு போக்கு காட்டினார்.

விதியை மீறிய ஆயிஷா

விதியை மீறிய ஆயிஷா

இதையடுத்து, ஷெரீன் மற்றும் ஆயிஷாவும் மலையாளி என்பதால் இருவரும் நீண்ட நேரமாக போட்டியாளர்கள் பற்றி மலையாளத்தில் பேசிக்கொண்டே இருந்தனர். இதை கவனித்துக்கொண்டு இருந்த பிக் பாஸ் ஆயிஷா, ஷெரின் மலையாளத்தில் பேசாதீங்க, தமிழில் பேசுங்க என்று மலையாளத்திலேயே கூறினார். இது சாதாரண விஷயமாக இருந்தாலும் வெளியில் மக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

வலுக்கும் கண்டனம்

வலுக்கும் கண்டனம்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு தமிழ் ரியாலிட்டி ஷோ இது சிட்டியில் மட்டும் இல்லாமல் அனைத்து கிராமங்களிலும் ஒளிபரப்பாகிறது. அது மட்டும் இல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் தமிழில் தான் பேச வேண்டும் என்று விதி இருக்கும் போது இவர்கள் இருவரும் விதியை மீறி தொடர்ந்து இப்படி பேசி வருவது விதி மீறல் என்றும், இது போன்ற தமிழ் ஷோவில் தமிழர்கள் போட்டியாளராக இருக்க வேண்டும் என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X